Sunday , May 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தீவிரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

தீவிரவாதத்தை எதிர்கொள்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

தெற்காசிய பிராந்திய வலயத்தில் ஏற்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியமாகும் என இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் இடையே டெல்லியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய அரசியல் உறவுகள் காணப்படுவதாக தெரிவித்த அவர், ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

உள்துறை அமைச்சருடனான சந்திப்பிற்கு முன்னர் பிரதமர் ரணில், இந்திய பிரதமரை சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், அதன்போது இரு தரப்பினரும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டதுடன் இருதரப்பிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …