Monday , October 20 2025
Home / செய்திகள் (page 472)

செய்திகள்

News

உறவுகளின் கண்ணீரைத் துடைக்க சர்வதேசத்துக்கும் இலங்கை அரசுக்கும் அழுத்தம் கொடுப்போம்! – முல்லைத்தீவில் மாவை

“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீரைத் துடிக்க சர்வதேச சமூத்திடமும், இலங்கை அரசிடமும் தன்னாலான அழுத்தங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மாவட்ட செயலத்துக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் களத்துக்கு நேற்று நேரில் சென்று ஆதரவைத் …

Read More »

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் நன்கொடை

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் 1தசம் 3 பில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. திட்டமில்லா கொடை உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதியை ஜப்பான் வழங்கவுள்ளது. திருகோணமலை துறைமுகத்தையும், துறைமுகத்தின் கடல்சார் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கும், துறைமுகத்தின் வழிகாட்டல் முறையை அபிவிருத்தி செய்வதற்குமான ஜப்பானிய உற்பத்திகளை இந்த கொடையின் மூலம் பெற முடியும். இக்கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஸ்ரீலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானிய அரசாங்கத்துடன் …

Read More »

ஸ்ரீலங்காவுக்குள் ஐ.எஸ். ஊடுருவ முயற்சி; பாதுகாப்பு பிரிவை எச்சரித்த அமெரிக்கா

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகள் ஸ்ரீலங்காவிலும் பிரவேசிக்கும் அபாயம் காணப்படுவதாக அமெரிக்க இராணுவத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ் ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்கு நாடுகள் மீது தாக்குதலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா போன்ற அமைதி நிலைவும் நாடுகளில் பிரவேசித்து திட்டங்களைத் தீட்டும் முயற்சியில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயததாரிகள் ஈடுபடும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளதெவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்காவுக்கு அண்மையில் …

Read More »

மஹிந்தவின் மே தினத்தை காலிமுகத்திடலில் நடாத்த ஏற்பாடு செய்க-ரணில் ஆலோசனை

கூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டத்தை நடாத்துவதற்கு காலி முகத்திடலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இம்மே தினக் கூட்டத்துக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் பிரதமர் அந்த அதிகாரிகளுக்கு கூறியுள்ளார். கூட்டு எதிர்க் கட்சிக்கு காலி முகத்திடலின் முழுப் பகுதியும் தேவைப்பட்டாலும் அதனையும் வழங்குமாறும், அதற்குத் தேவையான பாதுகாப்பு, …

Read More »

யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

யாழ் பல்கலை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் துணைவேந்தரின் எழுத்து மூல அறிக்கையை அடுத்து முடிவுக்கு வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களை மீளவும் இணைக்க கோரி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் இன்றைய தினம் (01) காலையில் நிர்வாகத்தினர் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று வகுப்புத்தடையினை இரத்து செய்தனர். எதிர்வரும் திங்கட்கிழமை (3) வழமைபோல் விரிவுரைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது – த.தே.கூ

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது சாத்தியம் அற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்ய முடியும் என கூறுவோருடன் பகிரங்க விவாதத்தை நடத்துவதற்கு தாம் தயார் எனவும் அவர் சூளுரைத்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவன்கோவில் வளாகத்தில் நடைபெற்ற தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து மக்களை தெளிவுபடுத்தும் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்

Read More »

லொரி விபத்து : ஒருவர் பலி

உடபுஸ்ஸல்லாவையில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து பொகவந்தலாவையை நோக்கிப் பயணித்த லொரி ஒன்று இன்று காலை 11 மணியளவில் நானுஒயா ரதல்ல குறுக்கு பாதையில் விபத்துக்கள்ளானதில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பாதை ஒரத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட 7 பேர் காயம் மடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது, இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி 5 பேருடன் …

Read More »

தந்தை செல்வாவின் 119 ஆவது பிறந்ததினம் இன்று

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தை செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்ததினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நினைவு கூறப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் தலைமையில் இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் துரையப்பபா விளையாட்டரங்கிற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற …

Read More »

மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிகள், வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு

மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடுவதாக வடமாகாண ஆளுநர் ரெஐினோல்ட குரே மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். எனினும் ஆளுநருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாக மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக மன்னார் ஆயர் இல்ல பிரதிநிதிளுக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண …

Read More »

ஸ்ரீலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடிவு

  அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடியும் என்றுஸ்ரீலங்காவின் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொழும்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களையே இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய முடியும் என்று இந்தியாவின் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் இந்தியா முதலீடு செய்து ஸ்ரீலங்கா துறைமுக அதிகார …

Read More »