Sunday , May 19 2024
Home / செய்திகள் (page 450)

செய்திகள்

News

கிளிநொச்சியில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் 1500 ஏக்கா் காணி

கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் இராணுவத்தினர் இதுவரை 1515.7 ஏக்கர் நிலப்பகுதியை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில், அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இத்தகவல்கள் வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் தனியார் அனுமதிப்பத்திர காணிகள் 374 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 168. 2 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான 973.5 ஏக்கர் …

Read More »

27ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

தமிழ் மக்கள் பேரவையினரால் வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேரவையின் இணைத் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்தியர் லக்ஸ்மன் தலைமையில் திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் மற்றும் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீட்டுத்தருமாறும் வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களை வலுப்படுத்துவதோடு, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு நீதி கோரும் வகையில் …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: இரு வாரங்களில் தீர்வு கிடைக்கும்? – முயற்சிப்போம் என்கிறார் மாவை

“நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இந்த அரசுக்கு வாக்களித்தோம். ஆனால், அந்த விடயங்கள் எவையும் உருப்படியாக நடைபெறவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றால் அது நல்லாட்சி அரசாக இருக்க முடியாது. கடந்த அரசில இடம்பெற்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறக் கூடாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்வு ஒன்றைப் பெற்றுத்தர முயற்சி செய்கின்றோம்.” …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி கிளிநொச்சி, வவுனியாவில் 27ஆம் திகதி ஹர்த்தால்!

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது. அனைத்துத் தரப்பினரையும் அதில் இணையுமாறு அழைக்கின்றோம்.” – இவ்வாறு கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டடோர் உறவினர்கள் சங்கத் தலைவி கலாரஞ்சினி இது தொடர்பில் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி அவர்களது உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி …

Read More »

சு.கவின் மே தினக் கூட்டத்துக்கு மஹிந்தவுக்கும் அழைப்பு!

மகிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு வருகை தருமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கவுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி கெட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும், மே தின வரலாற்றில் …

Read More »

மயிலிட்டித்துறைமுகப் பகுதி வெகுவிரைவில் விடுவிப்பு! – இருவேறு கூட்டங்களில் உறுதி

மயிலிட்டித்துறைமுகம் உள்ளடங்கலாக அந்தப் பிரதேசத்தைப் பாதுகாப்புத் தரப்பினர் வெகுவிரைவில் விடுவிப்பார்கள் என்று நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இருவேறு கூட்டங்களில் உறுதியளிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது. மயிலிட்டித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ளன. அவற்றை விடுவிக்குமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் – அழுத்தங்கள் கொடுக்கப்பட்டபோதும் அது விடுவிக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில்கூட …

Read More »

புதிய அரசமைப்பு குறித்து நாளை யாழில் செயலமர்வு!

புதிய அரசமைப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு, யாழ்ப்பாணத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது எனப் புதிய அரசமைப்புத் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புதிய அரசமைப்புத் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக இளைஞர் அமைப்புகளுக்கு புதிய அரசமைப்புத் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் …

Read More »

காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டியதாக கட்சியில் இருந்து ஆறாண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்ட பர்க்கா சுக்லா சிங் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லி பிராந்தியத்துக்கான காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் மற்றும் அக்கட்சியின் டெல்லி தலைவர் அஜய் மக்கான் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தி இருந்தார். ராகுல் காந்தி …

Read More »

ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலி

ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய குழுவான அஸ்டானா குழுவில் சைக்கிள் பந்தய வீரராக திகழ்ந்தவர், மைக்கேல் ஸ்கார்போனி(37). உள்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்றுள்ள இவர் அன்கோனா மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள பிலோட்ரானோ நகரில் வசித்து வந்தார். …

Read More »

அமெரிக்காவில் பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணையங்களில் ஊடுருவல் – ரஷிய எம்.பி. மகனுக்கு 27 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணைய தளங்களில் ஊடுருவி கிரெடிட் கார்ட் தகவல்களை களவாடி 16.9 கோடி டாலர்கள் இழப்பு உண்டாக்கிய ரஷிய நாட்டு பாராளுமன்ற எம்.பி.யின் மகனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரோமன் செலெஸ்னேவ்(32). ரஷிய பாராளுமன்ற உறுப்பினர் வலேரி செலெஸ்னேவ் என்பவரின் மகனான இவர் கடந்த 2014-ம் ஆண்டு மாலத்தீவு நாட்டுக்கு சென்றிருந்தபோது திடீரென்று மாயமானார். அவர் அமெரிக்க உளவுத்துறையினரால் கடத்தப்பட்டது …

Read More »