Sunday , May 19 2024
Home / செய்திகள் (page 440)

செய்திகள்

News

5ஆம் திகதி பாரிய வேலைநிறுத்தப் போராட்டம் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

சைட்டம் தனியார் மருத்துவமனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 5ஆம் திகதி பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அரசின் பிரதான ஐந்து தொழிற்சங்கங்கள் ஆதரவுத் தெரிவித்துள்ளன.

Read More »

உகந்த சூழ்நிலை ஏற்படும் போது வட கொரிய அதிபரை சந்திப்பேன்: அதிபர் டிரம்ப்

உகந்த சூழ்நிலை ஏற்படும் போது வட கொரிய அதிபரை சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். கடும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளும், அணு ஆயுத சோதனைகளும் நடத்தி வருகிறது. அமெரிக்க பகுதியை குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை சமீபத்தில் நடத்தியது. இருந்தும் எந்நேரமும் அணுகுண்டு சோதனை நடத்துவோம் என வட கொரியா எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே கடும் …

Read More »

தனியார் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்க உளவு செயற்கை கோள்

தனியார் நிறுவன ராக்கெட் மூலம் முதன் முறையாக உளவு செயற்கை கோளை தற்போது தான் அமெரிக்கா முதன் முறையாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க ராணுவம் ‘என்.ஆர்.ஓ.எஸ்.-76’ என்ற உளவு செயற்கை கோள் தயாரித்துள்ளது. அது நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன் 9 என்ற ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து அனுப்பப்பட்டது. இந்த நிறுவனம் கோடீசுவரர் லொன் …

Read More »

‘வடக்கு மக்களுக்கு என்னிடமே விமோசனம் உண்டு’ – மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான விமோசனம் தன்னிடமே உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில், வடக்கு – கிழக்கு மக்கள் விமோசனம் பெற தன்னை நோக்கி வரவேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்திய …

Read More »

சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்கின்றது: கஜேந்திரன்

கல்வித் துறையில் சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்வதாகவும் வடக்கு – கிழக்கு அரச நிர்வாகங்களிலே சிங்கள மேலாதிக்கம் வளர்ந்து செல்வதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) சாவகச்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் …

Read More »

செட்டிகுளம் மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்

வவுனியா – செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நித்தியானந்தம் என்பவர், ஏற்கனவே பதவி வகித்த பாடசாலைகளில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் இதன் காரணமாக குறித்த நியமனத்தை இரத்து செய்யுமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த பாடசாலைக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்படவேண்டும் எனவும் அதற்கான தகுதி …

Read More »

இடைநிறுத்தப்பட்ட ஏறாவூர் நகரசபை அலுவலர்களுக்கு மீள் நியமனம்

ஏறாவூர் நகர சபையில் பணியாற்றிய நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்று பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த 73 ஊழியர்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் மேற்கொண்ட நேர்முகத் தேர்வின் பின்னர், குறித்த ஊழியர்களுக்கு ஒப்பந்தம் மற்றும் பதிலீட்டு அடிப்படையில் குறித்த மீள்நியமனங்கள் நேற்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனால், ஏறாவூர் நகரசபையில் உள்ள வெற்றிடங்கள் …

Read More »

சர்வதேசத்திடமிருந்து இலங்கையை காப்பாற்றியது நல்லாட்சியே: ஜனாதிபதி

நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டமையால்தான் சர்வதேச குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை பெற்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் நாடாக இலங்கையை மாற்றினோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி-கெட்டம்பே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, எத்தகைய சூழ்ச்சிகள் மற்றும் சவால்கள் வந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வளர்ச்சியை தடுக்க முடியாது எனவும், சுதந்திரக் கட்சி வெளிப்படையான …

Read More »

துருக்கியில் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

ராணுவ புரட்சிக்கு உதவியதாக கூறி துருக்கியில் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். துருக்கியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவ புரட்சி நடந்தது. அதை அதிபர் ரீசெப் தய்யிப் எர்டோகன் பொதுமக்கள் உதவியுடன் முறியடித்தார். அமெரிக்காவில் தங்கியிருக்கும் மதகுரு பதுல்லா குலென் தூண்டுதலின் பேரில் புரட்சி நடந்ததாக தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து ராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மீது அதிபர் எர்டோகன் நடவடிக்கை மேற்கொண்டு …

Read More »

கிம் ஜொங் உன் புத்திசாலியானவர்: ட்ரம்ப்

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் ஒரு புத்திசாலி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், கிம் ஜொங் உன் மிக இளவயதிலேயே பாரிய பொறுப்பு ஒன்றை ஏற்றுள்ளதாகவும் ஏனைய தலைவர்களுடன் சரிசமமாக போட்டியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், …

Read More »