Sunday , May 19 2024
Home / செய்திகள் (page 470)

செய்திகள்

News

வைரஸ் அச்சுறுத்தலால் மூடப்பட்டது பேராதனைப் பல்கலைக்கழகம்!

கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி இன்று திங்கட்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. எனவே, பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் நாளை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விடுதிகளில் இருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க அறிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளில் ஒரு வகை காய்ச்சல் பரவுவதாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக சுமார் 500 மாணவர்கள் பல்கலைக்கழக சுகாதார நிலையத்தை நாடியுள்ளனர் என்று துணைவேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் …

Read More »

அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆரின் மகன் ரவி உயிரிழப்பு!

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனும், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையை ( எஸ்.டி.எவ்) உருவாக்கியவருமான ரவி ஜெயவர்த்தன இன்று பிற்பகல் கொழும்பில் காலமானார். இவர் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஒரே மகனாவார். இறக்கும்போது இவருக்கு வயது 80 ஆகும். எயர் சிலோன் நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றிய ரவி ஜெயவர்த்தன, பின்னர் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார். இதன்போதே அவர், 1984ஆம் ஆண்டு பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கினார். …

Read More »

டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் – சீனா,ரஷ்யா ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது

டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் சீனா,ரஷ்யா ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் …

Read More »

பாரிஸ் பருவநிலை ஒப்பந்த விவகாரம் – இந்தியா மீது டிரம்ப் நிர்வாகம் குற்றச்சாட்டு

பாரிஸ் பருவநிலை ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மீது டிரம்ப் நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது. சுற்றுச் சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர். பல்வேறு நாடுகள் இந்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில் இந்தியாவும் தனது ஒப்புதலை கடந்தாண்டு அளித்தது. இந்த நிலையில், பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை …

Read More »

சோமாலியா கடற்கொள்ளையர்களால் இந்திய வர்த்தக கப்பல் 11 ஊழியர்களுடன் கடத்தல்

சோமாலியா கடற்கொள்ளையர்களால் இந்தியா சேர்ந்த வர்த்தக கப்பல் 11 ஊழியர்களுடன் கடத்தப்பட்டது. துபாயில் இருந்து ஏமனில் உள்ள அல் முகாலா துறைமுகத்திற்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற இந்திய நாட்டை சேர்ந்த அக் கவுசார் என்ற வர்த்தக கப்பலை ஏப்ரல் ஒன்றாம் தேதி சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சோமாலியாவை சேர்ந்த கொள்ளையடிப்பு எதிர்ப்பு துறையின் முன்னாள் இயக்குநர் அப்திரிசாக் முகமது திரிர் பேசுகையில், “இந்திய …

Read More »

அமெரிக்காவின் செனட் சபை தேர்தலில் போட்டியிடும் இ-மெயிலைக் கண்டுபிடித்த தமிழன் சிவா அய்யாத்துரை

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள செனட் சபை தேர்தலில் இ-மெயிலைக் கண்டுபிடித்த தமிழன் சிவா அய்யாதுரை போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள செனட் சபை தேர்தலில் இ-மெயிலைக் கண்டுபிடித்த தமிழன் சிவா அய்யாதுரை போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் சிவா அய்யாத்துரை சைட்டோசல்வ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தன்னுடைய 7 வயதில் அமெரிக்காவிற்கு …

Read More »

ஈராக் அரசுப் படையினரின் வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அயத் அல் ஜுமைலி பலி

ஈராக் அரசுப் படையினரின் வான்வெளித் தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அயத் அல் ஜுமைலி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் அரசுப் படையினரின் வான்வெளித் தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அயத் அல் ஜுமைலி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த முக்கிய நகரமான மொசூல் நகரை கடந்த வாரத்தில் மீட்ட ஈராக் மற்றும் அமெரிக்கா வீரர்கள் …

Read More »

நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தி மொழி எழுதப்பட்டிருப்பதில் திமுக இரட்டை வேட்டை போடுகிறது – மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கண்டனம்

நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தி மொழி எழுதப்பட்டிருப்பதில் திமுக இரட்டை வேட்டை போடுகிறது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் முதலில் இந்தி மொழியில் தான் ஊர்ப்பெயர் எழுதப்பட்டிருக்கும். அடுத்து ஆங்கிலம், அதனையடுத்தே தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கும். மத்தியில் பாஜக அரசு வந்த பிறகு தான் இவ்வாறு எழுதப்படுகிறது என்று திமுக குற்றம்சாட்டியது. இதுகுறித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், …

Read More »

விவசாயிகள் பிரச்சினை குறித்து நாங்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம் -தம்பிதுரை உறுதி

விவசாயிகள் பிரச்சினை குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். கண்டிப்பாக இனியும் தொடர்ந்து பேசுவோம் என தம்பிதுரை உறுதி அளித்துள்ளார். தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேசிய தென்னிந்திய …

Read More »

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐ.ஐ.டி. தேர்வு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியலில், சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 2017-ம் ஆண்டிற்கான தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 8-வது இடத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் பெங்களூர் …

Read More »