Thursday , May 16 2024
Home / செய்திகள் (page 460)

செய்திகள்

News

சம்பந்தனையும் சுமந்திரனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்

மைத்திரி அரசாங்கத்துடன் இணைந்து சம்பந்தனையும் சுமந்திரனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறுவதற்கு காரணம், தான் மக்களுடைய பக்கம் நிற்பதாக காட்டி கொள்வதற்கே என்றும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே …

Read More »

யாழ். மருதங்கேணி கடல்நீர் ஊடாக நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும்

யாழ். மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ். மாவட்டத்தின் நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும் என வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்திற்கு இரணைமடு நீர் வராது எனக் குறிப்பிட்ட அவர், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா? என சம காலத்தில் கேள்விகள் எழுந்துவரும் நிலையில், இது தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் இதனைக் …

Read More »

மக்கள் பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம்; கேப்பாபுலவு மக்கள்

தாங்கள் தெரிவு செய்து அனுப்பிய மக்கள் பிரதிநிதிகளும் தம்மை ஏமாற்றி விட்டதாக நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், இன்றையதினம் நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடியிருந்தனர். கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி வன்னி மாட்ட நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களை அழைத்திருந்த கேப்பாபுலவு மக்கள் தமது …

Read More »

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை; விஷேட பிரதிநிதிகள் குழு ஸ்ரீலங்கா விஜயம்

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆய்வை மேற்கொள்ளும் வகையில் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்ரீலங்காவை சென்றடைந்துள்ளது. நாட்டில் நிலவும் அரசியல்தன்மை, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட நிலைமைகளை அவதானிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதிநிதிகள் சிலர் குழுக்கள் ஸ்ரீலங்காவுக்கு சென்று கண்காணிப்புகளை மேற்கொண்டனர். அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய ஸ்ரீலங்காவிற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைககள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த வரிச்சலுகை தொடர்பான விசேட …

Read More »

உண்மை கண்டறியும் ஆணைக்குழு விரைவில் அமைக்கப்படும்; ஹர்ஷ டி சில்வா

ஸ்ரீலங்கா அரசாங்கம் விரைவில் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கும் என்று ஸ்ரீலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் ஒரு இலகுவான செயற்பாடு அல்ல எனக் குறிப்பிட்ட அவர், இனவாதிகள் மற்றும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுபவர்களின் தடைகளைத் தாண்டி, இதனை முன்னெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு வேகமாக நல்லிணக்கத்தை அடைய முடியுமோ அந்தளவுக்கு வேகமாக தாம் நகர்ந்து …

Read More »

தமிழரைத் தொடர்ந்து ஏமாற்றினால் மஹிந்த போன்றே வீடு செல்வீர்கள்! – மைத்திரி – ரணில் அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை

அரசு

“நல்லாட்சி என்று கூறும் மைத்திரி – ரணில் அரசு தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கித்தான் ஆட்சிக்கு வந்தது. அதேவேளை, ஆட்சிக்கு வந்த பின்னர் ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இந்த அரசு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. எனவே, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழ் மக்களை தொடர்ச்சியாக இந்த அரசு ஏமாற்றினால் மஹிந்த அரசைப் போன்று இந்த அரசையும் வீட்டுக்கு அனுப்ப நேரிடும்.” – இவ்வாறு வவுனியாவில் வைத்து மைத்திரி – ரணில் …

Read More »

அரசுடன் நேரடிப் பேச்சுக்கு வரவேண்டும் தமிழர் தரப்பு! – அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனில் தமிழர் தரப்பு நேரடியாக அரசுடன் பேச்சுக்கு வரவேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நடைபெறவிருக்கின்ற தேர்தல்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேசத்தை வரவழைத்து தமிழர் தரப்பு தீர்வு காண நினைத்தால் அது ஒருபோதும் சாத்தியமற்றதாகும். புதிய அரசியல் அமைப்பின் மூலம் இனவாதம் பரவுவதையோ அல்லது நாட்டை …

Read More »

மைத்திரி அணியிலிருந்து 25 அமைச்சர்கள் மஹிந்த அணிக்கு! – செப்டெம்பரில் வருவர் என்கிறார் குமார வெல்கம எம்.பி.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியுடன் இணைந்திருக்கும் அமைச்சர்கள் 25 பேர் இந்த வருஇடம் செப்டெம்பர் மாதம் மஹிந்த அணியில் இணைவர்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “நல்லாட்சியை நிறுவப்போவதாகக் கூறிக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய இந்த அரசு தடம்புரண்டு செல்கின்றது. தேசிய அரசு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் இதுவரை …

Read More »

மஹிந்த அரசின் படுகொலைகள் விரைவில் அம்பலப்படுத்தப்படும்! – அமைச்சர் ராஜித தெரிவிப்பு

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் மனித படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இலஞ்ச, ஊழல் தொடர்பான அனைத்து உண்மைகளையும் விரைவில் வெளியிடுவோம். அதன் பின்னர் பொது எதிரணியின் ஆயுட்காலம் முடிவடைந்து விடும்.” – இவ்வாறு சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எதிர்வரும் மே தினக் கூட்டத்தின் பின்னர் அரச நிறுவனங்களை வீழ்த்துவோம் என்று சவால் விடுத்துள்ள மஹிந்த அணியான பொது எதிரணியின் …

Read More »

மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகள்: மத்திய அரசே பொறுப்பு என்கிறார் வடக்கு முதல்வர் விக்கி

வடமாகாண முதலமைச்சர்

“மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க வேண்டியது, மத்திய அரசின் கடப்பாடு. அதில் நாம் தான்தோன்றித்தனமாகத் தலையீடு செய்ய இயலாது. அவ்வாறு மத்திய அரசு தனது கடப்பாட்டைச் செய்யவில்லை என்பதை, மக்கள் எமக்கு எழுத்துமூலமாகத் தெரியப்படுத்தினால், அது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி மக்களுக்குரிய உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு, எங்களால் ஆவன செய்ய இயலும்.” – இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பிலக்குடியிருப்பு மக்கள், தமது …

Read More »