Monday , October 20 2025
Home / செய்திகள் (page 471)

செய்திகள்

News

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவர் மீதும் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவொற்றியூரில் மீனவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. நாம் ஒருசிலரை மாற்றச் சொன்னோம். அவர்கள் 30 பேரை மாற்றி உள்ளனர். இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. முறையாக தேர்தல் நடக்க வேண்டும். இந்திய தேர்தல் …

Read More »

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது, …

Read More »

கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்த ஆம் ஆத்மி முன்னாள் தலைவர் பிரசாந்த் பூஷன் மீது ராஜஸ்தான் காவல்துறையிடம் புகார்

கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்த ஆம் ஆத்மி முன்னாள் தலைவர் பிரசாந்த் பூஷன் மீது ராஜஸ்தான் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரோமியோ எதிர்பு படையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இந்த அறிவிப்பை கிண்டல் செய்யும் வகையில் முன்னாள் ஆம் ஆத்மி தலைவரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் டுவிட் செய்திருந்தார். அதில், “ரோமியோ ஒரே ஒரு …

Read More »

ஸ்ரீநகர்: பன்தாசவுக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துணை ராணுவப் படை வீரர்கள் ஆறு பேர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீர் மாநில கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகருக்குட்பட்ட பன்தாசவுக் பகுதியில் இன்று துணை ராணுவப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் உள்ளிட்ட இரு பாராளுமன்ற தொகுதிகளில் வரும் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப் படையை சேர்ந்த சில வீரர்கள் ஸ்ரீநகரில் இருந்து ஒரு …

Read More »

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி: 7 பேர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா-கிஸ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 11 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலச்சரிவு குறித்து போலீஸ் உயரதிகாரி சந்தீப் வான்சீர் கூறுகையில் “டிராப்ஷலா என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை பொதுமக்கள் கடக்க முயன்றபோது …

Read More »

பெங்களூரில் தடை செய்யப்பட்ட ரூ.9 கோடி பணத்துடன் 14 பேர் கைது: பெங்களூர் போலீசார் தீவிர விசாரணை

பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில் ரூ.9 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பிடிபட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அவற்றை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களாக …

Read More »

மைத்திரி, ரணில், சம்பந்தன் திருமலையில் பத்திரகாளி அம்பாள் தரிசனம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் இன்று சனிக்கிழமை திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்துக்குச் சென்றனர். அவர்கள் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆலயத்தையும் சுற்றிப் பார்த்தனர்.

Read More »

போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு பங்களிப்பு அவசியம்! – லால் விஜேநாயக்க வலியுறுத்து

“உள்ளக விசாரணையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அரசு அனுமதிக்க வேண்டும்.” – இவ்வாறு புதிய அரசமைப்பு குறித்து மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராகச் செயற்பட்டவரும் சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை அவசியம் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை …

Read More »

கேப்பாபிலவுக் காணிகள் நிச்சயம் விடுவிக்கப்படும்! – சம்பந்தனிடம் இராணுவத் தளபதி உறுதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் நிச்சயமாக விடுவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கேப்பாப்பிலவில் உள்ள 468 ஏக்கர் காணியை இராணுவத்தினர் கைப்பற்றி வைத்துள்ளனர். இராணுவத் தலைமையகமும் அதில் அமைந்துள்ளது. இந்தக் காணியை விடுவிக்குமாறு கோரி …

Read More »

காணிகளை உடன் விடுவிக்காவிடின் மக்களுடன் இணைந்து போராடுவோம்! – கேப்பாப்பிலவில்வைத்து மாவை எம்.பி. அரசுக்கு எச்சரிக்கை

“தொடர் அமைதிவழிப் போராட்டத்தின் மூலம் மக்கள் பெற்ற பலத்தைப் பிரயோகித்து விரைவில் காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இல்லாதுபோனால் நாங்களும் மக்களாகிய உங்களுடன் இணைந்து அரசுக்கு எதிராகவும், இராணுவத்துக்கு எதிராகவும் போராடுவோம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கேப்பாப்பிலவில் உள்ள பூர்வீக நிலங்களான 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரி …

Read More »