பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கத்தலைவர்கள் அறிவித்துள்ளனர். ராமேசுவரம் மீனவர் சங்கத்தலைவர்கள் போஸ், தேவதாஸ், ஜேசு, எமரிட், சகாயம் ஆகியோர் இன்று மீனவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில் திரைப்பட இயக்குநர் கவுதமன் மற்றும் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கு பின் மீனவர் சங்கத்தலைவர்கள் கூறியதாவது:- வருகிற 7-ந் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இலங்கை சென்று …
Read More »பண்டாரநாயக்க ஏற்றுக்கொண்ட சமஷ்டி முறையை மைத்திரி எதிர்ப்பது ஏன்
ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா அரசாங்கம், கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னர் யுத்த குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்க முடியாது என தெரிவிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் யுத்தக் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தமிழ்த் …
Read More »சிறுபான்மையினரின் அபிலாசைகளை பெற சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம்
சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமுகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு இன்று காலை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு …
Read More »விமல்லின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இரண்டு நீதியரசர்களில் ஒருவர் சமூகமளிக்காத காரணத்தினால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள சட்டமா அதிபரை எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று …
Read More »GSP+ வரிச்சலுகை: இறுதி தீர்மானம் மே மாதம் 15ஆம்
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்படுமா, இல்லையா என்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரிச்சலுகை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்குவது குறித்த அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் ஐரோப்பிய ஆணைக்குழுவால் ஐரோப்பிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கை அரசு மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் 27 நிபந்தனைகளில் அரசு முன்னேற்றம் …
Read More »அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் இன்று கொழும்பு வருகிறார்
அவுஸ்ரேலியாவின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ் சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இன்று 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை இவர் இலங்கையில் தங்கியிருப்பார். இதன் போது வடக்கு மாகாணத்துக்கும் பயணம் மேற்கொண்டு, அவுஸ்ரேலியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் அவுஸ்ரேலிய அமைச்சர் …
Read More »ஐ.தே.கவில் ரணிலுக்கு இணையாக சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம்
கிரிபத்கொடவில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. பேரணியைப் பார்வையிடும் மேடையில்,ஐதேகவின் ஏனைய தலைவர்களுடன், ரணில் விக்கிரமசிங்கவும், சரத் பொன்சேகாவும் அருகருகே அமர்ந்திருந்தனர். மேடையில் கட்டப்பட்டிருந்த பதாதையின் ஒரு பக்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் படமும், மற்றொரு பக்கத்தில் சரத் பொன்சேகாவின் படமும் பொறிக்கப்பட்டிருந்தது. அத்துடன், பேரணி நடத்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த …
Read More »பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்! – சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் வலியுறுத்து
“போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சர்வதேச சமூகத்துக்கு நீதி வழங்குவதாக இலங்கை அரசு வாக்குறுதியளித்துள்ளது. காலத்தைக் கடத்தாமல் தீர்வு வழங்க இலங்கை அரசு முன்வர வேண்டும்.” – இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் ஷெயில் ஷெட்டி மன்னாரில் வைத்துத் தெரிவித்தார். நில விடுவிப்புக்காகப் போராடும் முள்ளிக்குளம் மக்களையும், மறிச்சுக்கட்டிப் பிரதேச மக்களையும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலர் தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் …
Read More »நீதி வேண்டி தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது உறவுகளின் அறவழிப் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி அவர்களின் உறவுகளின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்கின்றன. வடக்கில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 44ஆவது நாளாகவும் தொடர்கின்றது. தீர்க்கமான முடிவு கிடைக்கும் வரையில் போராட்டக் களத்தில் இருந்து அகலப் போவதில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். வவுனியா நகரில் காணாமல்போனோரின் உறவுகள், இன்று 40 ஆவது நாளாகவும் …
Read More »போர்க்குற்ற விசாரணை விவகாரம்: மைத்திரியின் கருத்துக்கு வியாழனன்று சபையில் சம்பந்தன் தக்க பதிலடி!
“ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றுக்கு முரணாக குறிப்பாக போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு நாளைமறுதினம் வியாழக்கிழமை நாடாளுமன்றில் உரிய பதில் வழங்கப்படும்.” – இவ்வாறு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். எந்தவொரு படைவீரரையும் நீதிமன்றில் நிறுத்துவதற்கு தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், போர்க்குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு …
Read More »