Monday , October 20 2025
Home / செய்திகள் (page 466)

செய்திகள்

News

ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் 10 பெண்கள் உதவியுடன் இரவு பரபரப்பாக நடந்த பண சப்ளை

ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பது பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பது பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வெளியூர் நிர்வாகிகள் ஒவ்வொரு தெருவிலும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். 50 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …

Read More »

நாட்டின் இளைஞர் சமூகத்திற்கான தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும் – பிரதமர்

போட்டித்தன்மை வாய்ந்த, வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டின் இளைஞர் சமூகத்திற்கான தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற தேசிய ஏற்றுமதி மூலோபாய அபிவிருத்தி மாநாட்டில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். வெளிநாட்டுக் கடனும், நிலுவைத் தொகையும் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களாகும். நாட்டுக்கு போதுமான அன்னிய செலாவணி கிடைப்பதில்லை. ஏற்றுமதி சுற்றுலா மத்திய கிழக்கு தொழில்வாய்ப்பு என்பனவற்றின் மூலமே கூடுதலான அன்னிய …

Read More »

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலை கொள்வது ஏன்? – சசி தாரூர்

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்த இந்தியா கவலை கொள்வதாக, இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தாரூர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சுயசரிதை வெளியீட்டு வழாவில் உரையாற்றிய போதே அவர் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார். 15 ஆம் நூற்றாண்டில் சீன அட்மிரல் செங் சிறிலங்காவுக்கு வந்தது தனியே வணிக நோக்கத்துக்காக அல்ல. சீனப் பேரரசின் கீழ் உலக ஒழுங்கைக் கொண்டு …

Read More »

வடமாகாண சபை உறுப்பினர்கள் இருவருக்கு சபையை தலைமை தாங்கும் அதிகாரம்

வட மாகாண சபை அவை தலைவர் மற்றும் பிரதி அவை தலைவர் சபையில் இல்லாத நிலையில், சபையை தலைமை தாங்கும் அதிகாரம் வடமாகாண சபை உறுப்பினர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 90 ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே, மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோருக்கு அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளார். …

Read More »

கிளிநொச்சியில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் தீவிரம்; 592 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 592 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சலானது தற்போது ஸ்ரீலங்காவில் தீவிரமாகப் பரவிவரும் நிலையில், கிளிநொச்சியில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளமையை மாவட்ட சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. கிளிநொச்சியில் இதன் தாக்கமானது கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கண்டறியப்பட்டுள்ள நாள் முதல், கடந்த 03 ஆம் திகதி வரையான 67 நாட்களுக்குள் கிளிநொச்சி …

Read More »

வட மாகாணத்தில் ஆயிரத்து 252 வெற்றிடங்கள்

வட மாகாணத்தில் ஆயிரத்து 252 வெற்றிடங்கள் உள்ள நிலையில், அவற்றை அடையாளங்கண்டு பட்டதாரிகளை நியமனம் செய்யுமாறு வடமாகாண ஆளுநருக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளதாக வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 90 ஆவது அமர்வு இன்றைய தினம் மாகாண சபை பேரவை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது பட்டதாரிகள் கடந்த 39 நாட்களாக தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில், மாகாண சபை …

Read More »

கால இழுத்தடிப்புக்கு 2 வருட அவகாசத்தை பயன்படுத்தக்கூடாது! – அரசிடம் வலியுறுத்தியது சர்வதேச மன்னிப்புச் சபை

* சர்வதேச பங்களிப்புடன் கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.  * குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். * வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும். * பொதுமக்களின் காணிகள் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். * காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்ட கால அவகாசத்தை, கால இழுத்தடிப்புக்காக இலங்கை அரசு பயன்படுத்தக்கூடாது. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை …

Read More »

போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை: ராஜிதவின் கருத்தால் தமிழர்கள் அதிர்ச்சி!

“இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது ‘போர்க்குற்றங்கள்’ இடம்பெற்றதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு ஏதும் இடம்பெறவில்லை” என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் போர்க்குற்றச்சாட்டுக்கள் என்று கருதக்கூடியயளவிலான மனித உரிமை மீறல்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் நிகழ்த்தப்பட்டதற்கு நம்பகரமான சாட்சிகள் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ள நிலையில் …

Read More »

ஐ.நாவின் அழுத்தம் வந்தாலே பரிந்துரைகள் அமுலாக்கப்படும்! – செல்வம் எம்.பி. சுட்டிக்காட்டு

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அழுத்தங்களைக் கொடுத்தால்தான் இலங்கை அரசு பரிந்துரைகளை நிறைவேற்றும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது, இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்திருந்தார். இதற்குப் பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே செல்வம் …

Read More »

அரச வைத்தியர்கள் வெள்ளியன்று மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பு! – 60 தொழிற்சங்கங்கள் ஆதரவு

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (சைட்டம்) விவகாரம் தொடர்பில் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக அரச வைத்தியர்கள் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று இலங்கை அரச வைத்தியர்கள் சங்கத்தின் மத்திய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டாக்டர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம், கால்நடை வைத்தியர்கள் சங்கம், அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம், இணை சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கம், வங்கி …

Read More »