Monday , October 20 2025
Home / செய்திகள் (page 464)

செய்திகள்

News

ஹன்ஸ்ராஜ் வர்மா, ராஜ் துறை, நிரஞ்சன் மார்டி ஆகியோருக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து உயர்வு – தமிழக அரசு உத்தரவு

ஹன்ஸ்ராஜ் வர்மா, ராஜ் துறை, நிரஞ்சன் மார்டி ஆகியோருக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து உயர்வு கொடுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உள்துறை மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை கூடுதல் தலைமை செயலாளராக இருக்கும் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக கூடுதல் தலைமை செயலாளராக இருக்கும் பி.டபிள்யூ.சி. டேவிதார், கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் …

Read More »

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

வருமானவரி சோதனை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பதவியில் இருக்கும் அமைச்சர் மீது நடைபெற்றுள்ள இந்த வருமான வரிச்சோதனையை வரவேற்கிறேன். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை …

Read More »

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் 50 இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.4.5 கோடி ரொக்கபணம் பறிமுதல்

50 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.4.50 கோடி வீட்டில் ரொக்கபணம் பறிமுதல் செய்யபட்டு உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. 3 அணிகளாக களம் காண்கிறது. ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தேர்தல் களத்தில் எதிரும்புதிருமாக மோதி வருகிறார்கள். தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து சென்னை வந்துள்ள அ.தி.மு.க.வினர் எழும்பூர் கென்னத் லேனில் உள்ள நியூ லட்சுமி லாட்ஜில் தங்கியுள்ள னர். இன்று காலையில் வரு மான வரித்துறை அதிகாரி …

Read More »

உணவு ஒவ்வாமை இறக்காமத்தில் மூவர் பலி

அம்பாறை – இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் 600 ற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த புதன்கிழமை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் உயிரிழந்த நிலையில் ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக …

Read More »

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை அரசாங்கத்தின் வசம்

நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து அதனை போதனா வைத்தியசாலையாக நடத்திச் செல்ல தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி சர்ச்சை குறித்த தீர்வு திட்டம் இன்று அரசாங்கத்தால் வௌியிடப்படும் என முன்னதாக பாராளுமன்றத்தில் அவர் கூறியிருந்தார். இதற்கமைய சட்டமா அதிபரின் அனுமதியுடன் இலங்கை வைத்திய சபையால் முன்வைக்கப்பட்ட இலங்கை வைத்திய கல்வி குறித்த குறைந்த …

Read More »

முள்ளிக்குளத்தை யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாக மாற்றியது கடற்படை

யுத்தம் இடம்பெறாத மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாம் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மூன்று நாட்களில் முள்ளிக்குளத்தில் இருந்து வெளியேறுவோம் என வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா கடற்படை இன்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், வாழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான 53 ஏக்கர் காணியில் குடியிருந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் …

Read More »

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி நேற்று முதல் மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மேலதிக பஸ்சேவை எதிர்வரும் 14ம் திகதி வரை இடம்பெறும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு – புறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்திலிருந்து மேலதிகமாக 3900 பஸ்பயணங்கள் இடம்பெறவிருக்கின்றன. சொந்த இடங்களிலிருந்து பிரதான நகரங்களுக்கு திரும்பும் மக்களின் நலன்கருதி எதிர்வரும் …

Read More »

நெடுந்தீவு சிறுமி கொலை சந்தேக நபருக்கு மரண தண்டனை

நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி என்ற சிறுமி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 …

Read More »

வவுனியாவில் “சமுர்த்தி அபிமானி “

உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வவுனியாவில் “சமுர்த்தி அபிமானி” நிகழ்ச்சித்திட்டத்தினை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார ஆரம்பித்து வைத்தார். மாவட்டசெயலக வளாகத்தில் நேற்று ஆரம்பமான இந்த நிகழ்வினை சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் உள்ளுர் உற்பத்தியாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டு தமது பொருட்களை காட்சிப்படுத்தியதுடன் விற்பனையிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அரச நிர்வாகக் கட்டமைப்பை முடக்கி இனிப் போராட்டம்! – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீர்மானம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி அவர்களின் உறவினர்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் 47 நாட்களை எட்டியுள்ள நிலையில் தமது போராட்ட வடிவத்தை மாற்றுவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர். மாவட்ட மட்டத்தில் அரச நிர்வாகக் கட்டமைப்புகளை முடக்கிப் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் …

Read More »