Monday , October 20 2025
Home / செய்திகள் (page 463)

செய்திகள்

News

வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் சேவை தொடர்பில் மக்கள் விசனம்

வவுனியாவில் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன் வவுனியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘நில மெகவர’ ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நடத்தப்பட்டது. இந்த நடமாடும் சேவையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களைச் சேர்ந்த பெருமளவான பொது மக்கள் காணி பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக வருகை தந்துள்ளனர். வவுனியா தமிழ் …

Read More »

ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4000 ரூபாவால் அதிகரிப்பு : விரைவில் 10,000 ரூபா வழங்க நடவடிக்கை

மலையக பெருந்தோட்டட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பவை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் பாராளுமன்றத்தில் இணைந்து பேச்சுகள் நடத்தியதன் விளைவாக கொடுப்பவை 4000 ரூபாவால் அதிகரித்து விரைவில் 10, 000 ரூபாவை உதவி ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன தெரிவித்தபார். கடந்த காலங்களில் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்னவு அதிகரிக்கபடவில்லை என்று பலர் பல்வேறு வகையிலும் குறிப்பாக முக புத்தகங்களிலும் ஊடகங்களிலும் பல்வேறுபட்ட …

Read More »

எங்கே எங்கள் உறவுகள்? – தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது அறவழிப் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்களின் அறவழிப் போராட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்கின்றன. வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலையிலும் போராட்டம் நடத்தப்படுகின்றது. கிளிநொச்சியில் 48 ஆவது நாளாகவும், வவுனியாவில் 44 ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 32ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மரு­தங்­கே­ணி­யில் 25 ஆவது நாளாகவும், திருகோணமலையில் 35 ஆவது நாளாகவும் இன்று சனிக்கிழமை போராட்டங்கள் தொடர்கின்றன. …

Read More »

தமிழ் மக்களிடமிருந்து கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்கு அரசு சதித்திட்டம்! – சபையில் சிவசக்தி எம்.பி. கடும் சீற்றம்

சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை அரசு முன்னெடுத்து வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் சபையில் குற்றஞ்சாட்டினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டாண்டுகள் கடந்துள்ள,போதிலும் தமிழரின் முக்கிய பிரச்சினைகளுக்கு அரசு இன்னும் தீர்வை வழங்கவில்லை என்றும், மஹிந்தவைக் காரணம் காட்டியே தமிழரை இன்று நடுவீதிக்கு அரசு கொண்டுவந்துவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு …

Read More »

காணிகளில் இராணுவம்! வீதிகளில் தமிழ் மக்கள்!! – ஐ.நாவின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளரிடம் விக்கி சுட்டிக்காட்டு

“வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் பலவற்றில் இராணுவத்தினர் இன்னமும் உள்ளனர். அந்த மக்களோ வீதிகளில் அமர்ந்திருந்து தமது சொந்த மண்ணை மீட்பதற்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த அவல நிலைக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான தூதரகப் பணிப்பாளர் டெய்ஜி டெலிடம் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். “தமிழ் மக்களுடைய காணிகளில் இராணுவம் இருப்பதால், வடக்கில் அகதி வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர …

Read More »

பாபுல், பீடா, மாவா விற்றால் ஒருவருட சிறைத்தண்டனை! – அமைச்சர் ராஜித தெரிவிப்பு

பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலைத் தூள், இறக்குமதி செய்யப்படும் பாக்கு, இலத்திரனில் சிகரெட்  ஆகியவற்றை தடைசெய்வதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது. இவற்றை விற்பனை செய்தால் அபராதம் அல்லது ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் …

Read More »

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்துவது எப்படி? – கால அட்டவணை தயாரிக்கவுள்ளது கூட்டமைப்பு

இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தில், ஐ.நா. தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கால அட்டவணையைத் தயாரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. வடக்கில் நடைபெறும் தொடர் போராட்டங்கள் சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் அவசரமாகச் சந்திப்பதற்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் …

Read More »

சிரியா விமானப்படை தளம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்காவுக்கு ரஷியா கண்டனம்

சிரியா நாட்டின் விமானப்படை தளத்தின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷிய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள …

Read More »

முக்கிய ஆவணங்களை எடுத்து ஓடிய விஜயபாஸ்கர் கார் டிரைவர் பிடித்து உதைத்த சிஆர்பிஎப்

வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த முக்கிய ஆவணத்தை அவரது கார் டிரைவர் எடுத்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் …

Read More »

ஆர்.கே.நகர் தொகுதி – ஓ.பன்னீர்செல்வத்துக்கு 4 சுயேச்சை கட்சி வேட்பாளர்கள் ஆதரவு

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனனுக்கு சுயேட்சை கட்சி வேட்பாளர்கள் 4 பேர் ஆதரவு தெரிவித்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனனுக்கு சுயேட்சை வேட்பாளர் கணேசன் ஆதரவினை தெரிவித்ததோடு, ஆர்.கே.நகர் தொகுதி 47-வது வட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டிராஜனுடன் இணைந்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஏற்கனவே ரேணுகாதேவி, பத்மராஜன், மஞ்சுளா ரவிகுமார் ஆகிய 3 …

Read More »