Monday , October 20 2025
Home / செய்திகள் (page 462)

செய்திகள்

News

பெண் குழந்தைளுக்கான கல்வி உரிமையை ஊக்குவிப்பதற்காக ஐ.நா சபையின் அமைதித் தூதராக மலாலா யூசுப்சாய் நியமனம்

உலகம் முழுவதுமுள்ள பெண் குழந்தைளுக்கான கல்வி உரிமையை ஊக்குவிப்பதற்காக ஐ.நா சபையின் அமைதித் தூதராக மலாலா யூசுப்சாய் நியமிக்கப்பட உள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய், பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். பின்னர், பலத்த காயத்துடன் மலாலா லண்டன் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிர் பிழைத்த அவர், அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே …

Read More »

6 ஆயிரம் வழக்குகளை தீர்வு செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப நல நீதிபதி தேஜ் பகதுர் சிங் கின்னஸ் சாதனை

ஓரே ஆண்டில் 6 ஆயிரம் வழக்குகளை தீர்வு செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப நல நீதிபதி தேஜ் பகதுர் சிங் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்ட நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிபதியாக பணியாற்றி வரும் தேஜ் பிரதாப் சிங், கடந்த ஆண்டில் 327 வேலை நாட்களில் 6,065 வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இடையில், அம்மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்திய போதிலும் அசராமல் …

Read More »

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை தொடர்புடைய ஆவணங்கள் வெளியாகின

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை தொடர்புடைய ஆவணங்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் நேற்று வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பல ஆவணங்கள் இன்று வெளியாகியுள்ளன. இந்த ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன. பணப்பட்டுவாடா தொடர்புடைய ஆவணங்களும் வெளியாகியுள்ளன. ஆவணத்தில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், வாக்காளர் ஒவ்வொருவருக்கும் ரூ.4 ஆயிரம் வழங்க இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. …

Read More »

மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு – 10 நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து 10 நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் தொடர்ந்து …

Read More »

புத்தளம் வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யுமாறு கோரியும், வைத்தியசாலையை மாவட்ட பொது வைத்தியசாலையாக தரம் உயர்த்த கோரியும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள பிரதான சுற்று வட்டத்துக்கு அருகில் நேற்று (வெள்ளிக்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச சுகாதார தினத்தை முன்னிட்டு புத்தளம் இளம் பிரஜைகள் சங்கம் குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிக்கு முன்பாக இருந்து புறப்பட்ட …

Read More »

கோலாகலமாக நடைபெற்ற திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தேர் திருவிழா

64 சக்தி பீடங்களில் ஒன்றான திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று (சனிக்கிழமை) பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அதிதியாக கலந்துகொண்டதோடு, ஆயிரக்கணக்கான பக்த அடியார்களும் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு, அம்பாளின் இரதத்தின் முன்பாக சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. கடந்த மாதம் 30ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த …

Read More »

சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு அவுஸ்ரேலியா உதவி

சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு, அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து 15 மில்லியன் டொலர் உதவியை வழங்க அவுஸ்ரேலியா முன்வந்துள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் பெண் பணியாளர்களை பணிக்கு அமர்த்திக் கொள்வதற்கான, வேலைத் திட்டத்தில் பெண்கள் என்ற திட்டத்தின் கீழ் இந்த நிதிஉதவி வழங்கப்படவுள்ளது. சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தியில், தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், பெண்களை வலுப்படுத்தும் வகையிலும் இந்த திட்டத்துக்கு அவுஸ்ரேலியா உதவும் …

Read More »

கொச்சி துறைமுகத்தில் சிறிலங்கா போர்க்கப்பல்கள்

சிறிலங்கா கடற்படையின் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் நான்கு நாட்கள் பயணமாக இந்தியாவின் கொச்சி துறைமுகத்துக்கு வந்திருப்பதாக இந்திய கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ்எல்என்எஸ் சமுத்ர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலும், எஸ்எல்என்எஸ் சுரணிமல என்ற ஏவுகணை விரைவுத் தாக்குதல் கப்பலுமே கொச்சி துறைமுகம் வந்துள்ளன. இந்தக் கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கப்டன் ஜெகத் பிரியசாந்த பிரேமரத்ன, கப்டன் றோகித அபேசிங்க மற்றும் புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு …

Read More »

நாளை ஜப்பான் செல்கிறார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடக்கம் ஏப்ரல் 16ஆம் திகதி வரை பிரதமர் ஜப்பானில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயைச் சந்தித்து  பிரதமர் கலந்துரையாடவுள்ளதுடன், பல முக்கிய பேச்சுக்களிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், அமைச்சர்கள் கலாநிதி சரத் அமுனுகம, மலிக் சமரவிக்கிரம, நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷு மாரசிங்க, மற்றும் அதிகாரிகளும் இந்தப் …

Read More »

இறங்குதுறை இன்மையால் பூநகரி மீனவர்கள் சிரமம்

கிளிநொச்சி பூநகரி கரையோரப் பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மையால் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பூநகரியின் கடற்தொழில் கிராமங்களான வலைப்பாடு, வேரவில், நாச்சிக்குடா, பள்ளிக்குடா, ஆகிய கரையோரப்பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்படி கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேற்படி கடற்தொழிலாளர்கள் தொழிலை மேற்கொள்ளும் வகையில் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முடியாதுள்ளது. மேலும் கடல்வற்றுக்காலங்களில் நீண்ட …

Read More »