கொட்டகலை ரயில்வே கடவைக்கு அருகில் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று(திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்தே இந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 2 பிள்ளைகளின் தந்தையான வேலு சந்திரபோஸ் கொட்டகலை டிரேட்டன் கே.ஓ பிரிவை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …
Read More »வவுனியா மாவட்டத்தில் வீடற்றவர்களாக 11680 குடும்பங்கள்
வவுனியா மாவட்டத்தில் 11 ஆயிரத்து 680 குடும்பங்கள் வீடுகள் அற்றவர்களாகவும் 4 ஆயிரத்து 620 குடும்பங்கள் மலசலகூட வசதியின்றியும் உள்ளனர் என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் பல்வேறு தொழிற்சாலைகள் புனரமைப்பு செய்து, மீள ஆரம்பிக்க முடியாத சூழ்நிலையில், மட்டக்களப்பில் மதுபான தொழிற்சாலை நிர்மாணிக்கப்படுவது கண்டனத்திற்குரிய விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய …
Read More »மக்களுக்குப் பின்னால் ஒழிந்து நிற்கின்றது கூட்டமைப்பு; சிவசக்தி ஆனந்தன்
மக்களை வழிநடத்த வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு பின்னால் ஒழிந்து நிற்கின்ற நிலையில், தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்களுக்காக வீதியில் நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்சி ஒரு கொள்கையை நோக்கியே மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டுமே ஒழிய, மக்களுக்கு பின்னால் ஒழிந்து நிற்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் நேற்றைய தினம் …
Read More »கட்சியின் மே தினக் கூட்டம் இல்லை, அழைத்தால் எதற்கும் செல்வேன்-ஹக்கீம்
மே தினத்தன்று தனது கட்சி எந்தவொரு கூட்டத்தையோ, நிகழ்வுகளையோ நடாத்துவதில்லையெனவும் தமது கட்சிக்கு அழைப்பு விடுக்கும் எந்தவொரு கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே இவ்வாறு கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் வெளியேறிச் செல்லும் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
Read More »நல்லிணக்கம் ஆன்மீக தலைவர்களின் முக்கிய பணியாக வேண்டும்- ஜனாதிபதி
நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீக தலைவர்களாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் திரிபிடகம், விவிலியம்,அல்குர்ஆன் மற்றும் பகவத் கீதையில் நாம் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி,பௌத்த பிக்குகள், இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமயத் தலைவர்களுக்கு இதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்ளது என்றும் தெரிவித்தார். நேற்று தங்கொடுவை சிங்கக்குளியில் நடைபெற்ற …
Read More »எட்கா உடன்படிக்கை: இறுதி தீர்மானம் எடுக்க பிரதமர் இந்தியா பயணம்
இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறவுள்ள தொழில்நுட்ப ஒப்பந்தம் (எட்கா) தொடர்பில் இறுதித் தீர்மானங்களை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் ஜப்பானுக்கான விஜயம் நிறைவடைந்த பின்னர் இந்தியா செல்லவுள்ளார். இவ்விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் பிரதமர் ரணில் சந்திக்கவுள்ளார். இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளமைக்கு பிரதமர் இதன் பொது அழைப்பு …
Read More »புதிய அரசமைப்பே கொண்டுவரப்படும்! சு.கவின் கருத்து முட்டாள்தனம்!! – அமைச்சர் ராஜித திட்டவட்டம்
வடக்கு, கிழக்குக்கு விசேட அதிகாரங்களைப் பகிரக்கூடிய வகையில் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “அரசமைப்பு மறுசீரமைப்புக்கு மாத்திரமே நாங்கள் அனுமதிப்போம். புதிய அரசமைப்பொன்று கொண்டுவரும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாரில்லை” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தொடர்ச்சியாக முன்வைத்துவரும் கருத்துகள் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். …
Read More »அரசு பதில் கூறும்வரை உறவுகளுக்கு நீதிவேண்டி போராட்டம் தொடரும்! – காணாமல்னோரின் உறவினர்கள் தெரிவிப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் தொடர் அறவழிப் போராட்டம் தீர்வின்றி இன்று தொடர்கின்றது. அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி போராட்டம் தொடரும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று 49 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் தொடர்கின்றது. அவ்வாறே வவுனியாவில் 45ஆவது நாளாகவும், முல்லைத்தீவில் 33ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம் …
Read More »அமைச்சரவை மாற்றங்களுடன் சு.க. அரசை அமைத்தே தீருவேன்! – மைத்திரி திட்டவட்டம்
எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டையடுத்து அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை அமைப்பதற்குத் தான் உறுதிபூண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சக்திமிக்க எதிர்காலமொன்றை உருவாக்குவதற்காகத் தற்போதைய அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து தனது அரசின் மீது வீசப்பட்டு வரும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களையும், அபத்தமான விமர்சனங்களையும் எதிர்கொண்டு சிறப்பானதொரு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தங்கள் மீது நம்பிக்கை …
Read More »மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பரிதாப மரணம்! – யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் வீட்டில் இடம்பெற்ற அலங்கார வேலையின்போது மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் சுன்னாகம் மத்தி ஜே198 கிரமசேவகர் பிரிவிவைச் சேர்ந்த குணதாசன் கிறிஸ்ரி யோசப் (வயது – 42), கி.சுகந்தினி (வயது – 37) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இப்பகுதியில் உள்ள கத்தோலிக்க ஆலயம் ஒன்றின் விக்கிரக பவனி இல்லங்கள் தோறும் எடுத்துச் செல்லப்படுகின்றது. அந்தவகையில் …
Read More »