வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா மக்களின் தோள்களுக்கு துணையாக நின்று எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார். வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 5 முறை அணுகுண்டு சோதனைகளையும், எண்ணற்ற முறை ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, அந்த நாடு உலக அரங்கை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஐ.நா. …
Read More »நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழப்பு
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதனால் பதுளை, மாத்தறை, மதுகம, அதுருகிரிய, பலிஅத்த, உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார். இயந்திரம் செயலிழந்தமைக்கான காணம் கண்டறியப்படாத நிலையில், செயலிழந்துள்ள இயந்திரத்தை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையம் …
Read More »சிவன் அறக்கட்டளை நிலைத்தின் கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்பணம்
சிவன் அறக்கட்டளை நிலைத்தின் கல்வி மேம்பாட்டு பேரவை இன்றைய தினம் யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இதன்போது கல்வி, விளையாட்டு, கலை ஆகிய துறைகளில் சாதித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான ஊக்குவிப்பு நிதியும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் இன்று காலை 9 மணிக்கு மேற்படி கல்வி மேம்பாட்டு பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கல்வி மேம்பாட்டு பேரவையின் தலைவர் வடமாகாண ஓய்வுநிலை மாகாண கல்வி பணிப்பாளர் வ.செல்வராசா …
Read More »சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: போப் ஆண்டவர் உருக்கமான வேண்டுகோள்
சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என போப் ஆண்டவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஈஸ்டர் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் ஆற்றிய ஈஸ்டர் தின உரையில், அண்மையில் சிரியாவில் விஷ வாயு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது …
Read More »டொனால்டு டிரம்ப் வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட வலியுறுத்தி அமெரிக்காவில் 150 இடங்களில் பேரணி
அமெரிக்காவில் ஜனாதிபதி வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட வலியுறுத்தி 150 இடங்களில் போராட்டக்காரர்கள் பேரணிகள் நடத்தினர். அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிடும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதைப் பின்பற்றி, தனது வருமான வரி கணக்கை வெளியிட முடியாது என ஜனாதிபதி தேர்தலின்போது குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப் கூறி விட்டார். இது அங்கு பெரும் …
Read More »சீனாவில் பேருந்து விபத்து: 10 பேர் பலி, 4 பேர் மாயம்
சீனாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள கையாங் மாகாணத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 10 பேர் பலியாகினர். சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குயிஷோவு மாகாணத்தில் உள்ள கையாங்கில் இருந்து வெங்கான் பகுதிக்கு 19 பேர் அமரக்கூடிய மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆற்று மேம்பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் 10 பயணிகள் பலியாகினர். 5 பேர் …
Read More »இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்த நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக டெல்லி வந்தார்
இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்தும் நோக்கத்தில் நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக இன்று டெல்லி வந்தடைந்தார். நேபாள நாட்டின் புதிய அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்ற பித்யா தேவி பண்டாரி, கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், அந்நாட்டு மந்திரிசபையின் ஒப்புதல் கிடைக்காததாக் அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பின்னர் செய்யப்பட்ட ஏற்பாடுகளின்படி நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக …
Read More »விமானத்தில் பயணிகளின் அத்துமீறலை தடுக்க புதிய விதிமுறை – ஏர்இந்தியா
விமானத்தில் அத்துமீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஏர்இந்தியா புதிய விதிமுறைகளை கொண்டு உள்ளது. விமானத்தில் பயணிகளின் அத்துமீறலை தடுக்க புதிய விதிமுறைகளை கொண்டு வந்து உள்ள ஏர்இந்தியா, இதுபோன்ற பயணிகளுக்கு அபராதம் விதிக்க மற்றும் சட்டரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளது. விமானங்களில் பயணிகள் பயணிக்க தடைசெய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில் விமான காலதாமதத்திற்கு பயணிகளுக்கு அபராதம் விதிக்க ஏர் இந்தியா முடிவு செய்து உள்ளது. …
Read More »கேரள மலப்புரம் மக்களவை இடைத்தேர்தல்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி
கேரள மலப்புரம் மக்களவை இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் பிகே குஞ்சாலி குட்டி வெற்றி பெற்றார். கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி எம்.பி.யாக இருந்த அகமது மரணமடைந்தார். இதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 71.33 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் முஸ்லீம் லீக் வேட்பாளரான …
Read More »பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை – முலாயம்சிங் யாதவ்
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி இன்னும் வலுவாக இருப்பதாகவும், பாராளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்றும் முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாடி, காங்கரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் படுதோல்வியை சந்தித்தது. அதேபோல மாநிலத்தின் மற்றொரு பெரிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் கடும் சரிவை சந்தித்தது. ஆனாலும் சமாஜ்வாடி, பகுஜன் …
Read More »