சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 13 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். புல்மோட்டை கொடுவகட்டுமலை கடற்பகுதியில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, மூன்று படகுகளையும் தடை செய்யப்பட்ட வலைகளையும் 350 கிலோ நிறை கொண்ட மீன்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் மீட்கப்பட்ட படகுகள், வலைகள் மற்றும் மீன்களையும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More »வவுனியா கந்தசாமி ஆலயத்தில் திருட்டு
வவுனியா – தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி கோயிலில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கோயிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் உண்டியல் உடைத்து பெருமளவு பணம் மற்றும் ஒலிபெருக்கியையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா – தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மூடிவிட்டு சென்ற நிலையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று காலை பூசாரிஇ பூஜைகளை மேற்கொள்வதற்காக கோயிலுக்கு …
Read More »புத்தளம் சாலியவெவ பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு
புத்தளம் சாலியவெவ பிரதேசத்தில் தலையற்ற மனித எச்சங்கள் சிலவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து எம்.பி 20 ரக ரிவோல்டர் ஒன்றையும் சாலியவெவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த மனித எச்சங்கள் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் சேர்த்து கடந்த 4ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வாக்குமூலம் …
Read More »மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவினால் உயிரிழந்த மக்களுக்கு மலையகத்தில் அஞ்சலி
மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவினால் உயிரிழந்த மக்களுக்கு மலையகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா டயகம மேற்கு 5ஆம் பிரிவு தோட்ட மக்கள் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இவ் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். குப்பைமேடு சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியும் ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்திப்பதாகவும், அவர்களுக்கு வெகு விரைவில் நிவாரண உதவிகள் கிடைக்க …
Read More »இலங்கை பிரஜைகள் என்றாவது எங்களை மதியுங்கள்; சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் ஆதங்கம்
மக்களுக்கு சேவை செய்வதாக பெருமிதம் வெளியிடும் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒருவரேனும் தங்களை வந்து பார்வையிடவில்லை என்று பன்னங்கண்டி – சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் ஆவேசம் வெளியிட்டுள்ளனர். மலையக வம்சாவளிகள் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்பட்டாலும் இலங்கை பிரஜைகள் என்ற காரணத்தினாலாவது தம்மை மனிதர்களாக மதியுங்கள் என்றும் இரந்து கோரியுள்ளனர். நிரந்தர காணி உரிமைப்பத்திரத்தை வழங்கினால் மாத்திரமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்ற எச்சரிக்கையுடன் சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று, 27 ஆவது நாளாகவும் …
Read More »கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகளைக் காப்பாற்றியோர் மீது தாக்குதல்
வவுனியா – ஓமந்தை, கொம்புவைத்தகுளம் பகுதியில் இரண்டு யானைக் குட்டிகள் உட்பட நான்கு யானைகள் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளன. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 8.30 அளவில் இடம்பெற்றுள்ளது. கொம்புவைத்தகுளம் பகுதியில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் கிடைக்கப்பெற்றது. இதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும் மாலை 4 மணி ஆனபின்னரும் வனவிலங்கு ஜீவராசிகள் …
Read More »மீதொட்டமுல்ல அனர்த்தத்தின் எதிரொலி; நாடு திரும்புகிறார் ரணில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக்கொண்டு நாடு திரும்பத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்திருந்தார். ஜப்பானிய பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நேற்று வியட்நாமுக்கான பயணத்தை ஆரம்பித்தார். இந்த நிலையில் மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த விபத்தில், 26 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையில், பிரதமர் தமது பயணத்தை சுருக்கிக்கொண்டு …
Read More »திபெத்திய புத்தமதத் துறவியொருவர் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்தார்
திபெத்திய புத்தமதத் துறவியொருவர் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்தார். இச் செய்தியை திபெத்தில் பணியாற்றும் கண்காணிப்புக் குழுவும், அமெரிக்க அரசு ஆதரவு பெற்ற வானொலியும் வெளியிட்டுள்ளன. அடையாளம் தெரியாத அந்த புத்தபிட்சு மேற்கு சிச்சுவான் மாகாணத்தின் கன்சி எனுமிடத்திலுள்ள பொதுச் சதுக்கத்தில் தனக்குத்தானே தீயிட்டுக்கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடியாக தீ அணைக்கப்பட்டு பிட்சுவை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். பிட்சு உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அப்பிரதேசத்தின் தன்னாட்சி அரசு …
Read More »ஊர்காவற்துறையில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்துவைப்பு
ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தின் வளாகத்தில் கடற்படையினரால் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மறைமாவட்ட ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆயரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடற்படையினரால் கடந்த மாத இறுதி பகுதியில் சுத்திகரிப்பு இயந்திர தொகுதி அமைக்கப்படும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் வடபகுதி கடற்படை கட்டளை தளபதி மற்றும் கடற்படை அதிகாரிகள் குருமார்கள் கலந்து கொண்டனர்.
Read More »மீதொட்டமுல்ல விபத்தில் பலியானோருக்கு ஒரு இலட்சம், பாதிக்கப்பட்டோருக்கு 25 இலட்சம்
மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வரை நட்டஈடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த விபத்தில் சொத்துக்களை இழந்தவர்களுக்கு அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபா வரை நட்டஈடாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – மீதொட்டமுல்ல குப்பை மேடு கடந்த 14ஆம் திகதி மாலை …
Read More »