Monday , October 20 2025
Home / செய்திகள் (page 455)

செய்திகள்

News

கட்டடத்தை அகற்றுக; சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்முனை கல்வி வலயத்திலுள்ள சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் கட்டடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலைக்கு முன்பாக வீதியின் ஓரமாக அணிவகுத்து பல்வேறு சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நிலவும் வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இருமாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக அண்மையில் அடிக்கல் …

Read More »

நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளம்; புகையிரத கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எந்தவொரு சலுகையுமின்றி தங்களை அடிமைகளாக, கட்டாயப்படுத்தி நல்லாட்சி அரசாங்கம் வேலை வாங்குவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகையிரத கடவை ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விடுமுறை எதுவுமின்றி நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளத்திற்காக வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கடந்த நான்கு வருடங்களாக தற்காலிகமாக புகையிரதக் கடவைக் காப்பாளர்களாக கடமை புரிவோரை நிரந்தர நியமனமாக்குமாறு கோரி, மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்னால் …

Read More »

வாழ்வுக்கான போராட்டம் மரணத்தில் முடிந்துவிட்டதே! – மனைவி, மகள், மருமகன், பேர்த்தியை இழந்து தவிக்கும் முதியவர்

“ஐயோ, எனது முழுக் குடும்பமுமே குப்பைமேட்டுக்குள் புதைந்து சிதைந்துபோயுள்ளது. பேரன் மட்டுமே உயிருடன் இருக்கின்றான். வாழ்வதற்காக முன்னெடுக்கப்பட்ட எனது போராட்டம் மரணத்தில் முடிந்துவிட்டதே…” – இவ்வாறு கண்ணீர்மல்க கருத்து வெளியிட்டுள்ளார் மீதொட்டமுல்ல குப்பைமேட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளராகச் செயற்பட்ட என்.கீர்த்திரத்ன. மீதொட்டமுல்லயில் குப்பைகொட்ட வேண்டாமென முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை எல்லாம் இவரே தலைமையேற்று நடத்தியிருந்தார். இதனால், பொலிஸாரின் கொட்டன், பொல்லுத் தாக்குதல், கண்ணீர்ப் புகைகுண்டுத் தாக்குதல்ஆகியவற்றுக்குள் உள்ளாகியிருந்தார். எவ்வளவுதான் நெருக்கடிகள் …

Read More »

மீதொட்டமுல்லயில் தொடர்கிறது மீட்புப் பணி! – 31 சடலங்கள் இதுவரை மீட்பு

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. அத்துடன், அனர்த்ததால் ஏற்பட்ட சொத்து இழப்பீடு குறித்த மதிப்பீட்டு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகின்றது. கள ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை மொத்தமாக 31 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 10 பேர் காணாமல்போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 30 பேர் காணாமல்போயுள்ளனர் என முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்த குறித்த நிலையில் அத்தொகை 10 ஆகக் …

Read More »

மீதொட்டமுல்ல அனர்த்தம்: ரணிலிடம் வியட்நாம் ஜனாதிபதி அனுதாபம் தெரிவிப்பு

மீதொட்டமுல்லயில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பாக இலங்கை மக்களுக்கும் அரசுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக வியட்நாம் சோஷலிசக் குடியரின் ஜனாதிபதி டிரன் டய் குவனும், வியட்நாம் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் குயென் பு டொங்கும் தெரிவித்துள்ளனர். இந்த உணர்வுபூர்வமான சந்தர்ப்பத்தில் வியட்நாம் மக்களும், அரசும் தமது உள்ளங்களால் இலங்கையுடன் ஒன்றாக இணைந்திருப்பதாக வியட்நாம் ஜனாதிபதியும், கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று செவ்வாய்க்கிழமை …

Read More »

காணாமல்போனார் அலுவலகம் விரைவில் உருவாக்கப்படும்! – ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்கிறார் சுமந்திரன்

காணாமல்போனார் அலுவலகம் தொடர்பான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணாமல்போனோரைக் கண்டுபிடித்து தருமாறு கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் மற்றும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே காணாமல்போனோரின் உறவுகள் மேற்கொண்டுள்ள போராட்டம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் …

Read More »

வாட்டி வதைக்கிறது வறட்சி! – 7 இலட்சம் பேர் பாதிப்பு

வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் கடும் வறட்சி காரணமாக 6 இலட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்து 96 ஆயிரம் குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய நீரைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. வறட்சி காரணமாக வடக்கு மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குளங்களும், நீர்நிலையங்களும் வற்றிப் …

Read More »

பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லை – கோட்டாபய ராஜபக்ஷ

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லையென வெளியான செய்தி உண்மையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொட்டு அம்மான் குறித்து பலவாறான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லையென குறிப்பிட்டுள்ள கோட்டா, அதன் காரணமாகவே அவர் உயிருடன் உள்ளாரென தெரிவிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். …

Read More »

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் தீர்வின்றி 28ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவனஈர்ப்பு போராட்டம் தீர்வின்றி 28ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்கிழமை) தொடர்கிறது. மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து சுமார் 27 வருடங்களாக பன்னங்கண்டி பகுதியில் வாழ்ந்து வரும் மக்களே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சிவா பசுபதி கிராம மக்களுக்கு காணிகளை வழங்குவதாக உரிமையாளர் குறிப்பிட்டுள்ள நிலையில், தற்போது தமக்கும் தீர்வு வேண்டுமென கோரி சரஸ்வதி கிராம மக்கள் மற்றும் ஜொனி குடியிருப்பு மக்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தாம் …

Read More »

பொத்துவில் – பானம பகுதியில் படகு சவாரியில் ஈடுபட்ட இளைஞன் விபத்துக்குள்ளாகி மரணம்

அம்பாறை பொத்துவில் – பானம பகுதியில் உள்ள ஆற்றில் படகு சவாரியில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதாகவும் உயிரிழந்தவர் பானம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்களுடன் சேர்ந்து குறித்த பகுதியில் உள்ள ஆற்றில் இளைஞர்கள் சிலர் படகு போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, படகு ஒன்று சமநிலை இழந்ததன் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த …

Read More »