தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அமைதிப்படை என்ற போர்வையில் இந்தியப் படைகள் புரிந்திட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக அஹிம்சை வழியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வீரச்சாவடைந்த நாட்டுப்பற்றாளர் – ஈகச்சுடர் – தியாக தீபம் அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் நேற்று உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன. அன்னை பூபதியின் கல்லறை அமைந்துள்ள மட்டக்களப்பு, நாவலடி கடற்கரை நினைவு வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவுதின …
Read More »உலகின் வயதான பெண்மணி ஜமைக்கா நாட்டை சேர்ந்த வைலட் பிரவுன் நீண்ட ஆயுள் ரகசியம்
உலகின் வயதான பெண்மணி என்ற பெருமையை ஜமைக்கா நாட்டை சேர்ந்த வைலட் பிரவுன் பெற்றுள்ளார். ஜமைக்காவின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் வைலட் பிரவுன் (117), இவர் தான் தற்போது உலகிலேயே வயதான பெண் ஆவார். வைலட் கடந்த 1900 ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார். கடந்த மாதம் தான் இவர் தனது 117வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார். பிரவுன் தனது 97 வயதான மகனுடன் தற்போது …
Read More »அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களுக்கு தனிப்பெயரை அறிவித்து மீண்டும் சீனா அடாவடி நடவடிக்கை
அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு தீபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில், திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லமா அண்மையில் அருணாச்சல பிரதேசம் சென்றார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், சீனாவின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா தலாய்லாமா பயணத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதனால், இந்தியா மீது சீனா கடும் …
Read More »பெரா வழக்கு: தீர்ப்பை திரும்ப பெறக்கோரி தினகரன் தாக்கல் செய்த மனு வாபஸ்
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தாக்கல் செய்த மனுவை டி.டி.வி.தினகரன் வாபஸ் பெற்றுள்ளார். அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் சார்பில் …
Read More »வித்தியா கொலை விழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபர்கள் 12 பேரும் கடும் பாதுகாப்புடன் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டதாக எமது …
Read More »அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை – புதிய சமரச திட்டம் தயாராகிறது
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாளை குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக புதிய சமரச திட்டம் தயாரிக்கப்படுகிறது. அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார். அதில் தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். அதை எடப்பாடி பழனிசாமி அணி அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டு தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். இதை தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக …
Read More »இனங்காணாத நோய்த்தொற்றினால் திருகோணமலையில் மூவர் பலி
இனங்காணப்படாத நோய் தொற்று காரணமாக திருகோணமலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. டெங்கு நோய் காரணமாக பலர் உயிரிழந்து வரும் நிலையில் இன்புளுவென்சா எச்1 என்1 எனும் நோய்த்தொற்றினால் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை – சிறிமாபுற பகுதியில் வசித்து வந்த எச்.ஹேவாவித்தாறன எனும் 58 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 12 ஆம்திகதி காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக குறித்த நபர் அருகிலிருந்த தனியார் மருத்துவ நிலையங்களில் …
Read More »அப்பாவி உயிர்கள் பலியானமைக்கான பொறுப்பை ஏற்பதாக ரணில் தெரிவிப்பு
மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் அப்பாவி உயிர்கள் பலியானமைக்கான பொறுப்பை ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். வெகு விரைவில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகளை அமைத்துக்கொடுப்பதாக உறுதியளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இனியும் மீதொட்டமுல்ல பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினார். கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல பகுதியில் காணப்படும் இராட்சத குப்பைமேடு குடியிருப்புக்கள் மீது சரிந்ததில் இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். இந்த …
Read More »மீத்தொட்டமுல்லை அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு நாளை முதல் வீடுகள் ; ஜனாதிபதி பணிப்புரை
மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்து அனர்த்தத்திற்குள்ளான மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி முழுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இன்று (19) முற்பகல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார். மீத்தொட்டமுல்லை பிரதேசத்தில் இடர் வலையத்திலுள்ள மக்களை மீட்பதற்கு முன்னுரிமையளித்து …
Read More »ஸ்ரீலங்கா, இந்தியாவிற்கு இடையில் பொருளாதார உடன்படிக்கை?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீலங்காவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின்போது, கூட்டு அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்தியாவின் த வயர் (The Wire) இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடன் சுமையில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கா சீனாவின் பிடியில் இருந்து விடுபடுவது கடினமானது என்பதால், இதனைச் சமநிலைப்படுத்தும் வகையில், திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ரீலங்கா முன்வந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் …
Read More »