வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த காரியாலயம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளன மன்றத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், தர்மபால செனவிரத்தின ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் நகர சபை உபபிதா …
Read More »மீளக்குடியேற்றம், காணாமல்போனோர் விவகாரத்துக்குத் தீர்வு! – ஜனாதிபதி வாக்குறுதி
வடக்கில் மீள்குடியேற்றம் குறித்து நடைபெறும் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்திவரும் போராட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் பிரஸ்தாபித்தார். வடக்கில் அறுபது சதவீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர். அடுத்த மூன்று மாத காலத்தில் மிகுதியானோரும் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள். காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையைக் கவனத்தில் கொண்டு காணாமற்போனோர் தொடர்பான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார். கால அவகாசம் …
Read More »கேப்பாப்பிலவில் 111 ஏக்கரை மட்டும் விடுவிப்பதற்குப் படையினர் இணக்கம்! – கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தகவல்
“முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் 67 குடும்பங்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணியையும், வற்றாப்பளை – புதுக்குடியிருப்பு முதன்மை வீதியையும் விடுவிப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதியில் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விடுவிப்புத் தொடர்பில் அடுத்த மட்டத்தில் ஜனாதிபதி – பிரதமர் மட்டத்தில் பேசவேண்டியுள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். …
Read More »மஹிந்தவின் சகாக்கள் திருடிய பணத்தை மீட்க சர்வதேச உதவி! – ஐ.தே.க. தெரிவிப்பு
மஹிந்த ஆட்சியில் அமைச்சர்கள் திருடிய பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக சர்வதேச உதவிகள் கோரப்பட்டிருக்கின்றன என்று ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஊழல், மோசடியால் இந்த நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாலேயே மக்கள் மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து எம்மிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைத்தனர். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதும், ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் …
Read More »முஸ்லிம்களின் வாக்குகளால் சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவேன் – மஸ்தான் எம்.பி
முஸ்லிம்களின் வாக்குகளால் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த போவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற மே தினம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்களுடான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் 12 வீதமாக காணப்பட்டது. எனினும், தற்போது, 4 …
Read More »மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்குவதினால் சூழலுக்குப் பாதிப்பு இல்லை: கலாநிதி கே.அருளானந்தம்
யாழ். மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தினால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என நாறா நிறுவனத்தின் சமுத்திரவியல்துறை தலைவர் கலாநிதி கே.அருளானந்தம் தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தினால் சூழல் பாதிப்பு ஏற்படும் என நாறா நிறுவன ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி மேற்படி திட்டத்தை உடனடியாக நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில், யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது …
Read More »காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து எவரும் கண்டுகொள்வதில்லை : உறவினர்கள் கவலை
காணிப்பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் அதிகாரிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொள்வதில்லையென உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறும் அவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்துமாறும் வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப் போராட்டங்கள் இரு மாதங்களை எட்டவுள்ள நிலையில், அரசாங்க அதிகாரிகள் …
Read More »கூட்டமைப்பை சிதைக்கும் எண்ணமில்லை: அனந்தி சசிதரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்கும் எண்ணம் தனக்கில்லை எனவும் எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் அதனை கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே சமாளிக்க தயார் என்றும் வட. மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகளினால் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த …
Read More »கிளிநொச்சியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு
கிளிநொச்சி பளை பொலிஸாரால் 6 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடற்படையினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து நேற்று (புதன்கிழமை) மேற்கொண்ட தேடுதலின்போது கஞ்சா போதைப்பொருளும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இத் தேடுதல் நடவடிக்கையின் போது ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கேரள கஞ்சாவை பருத்தித்துறை …
Read More »பேருந்தின் சில்லில் சிக்குண்டு பெண் பரிதாபமாக உயிரிழப்பு: சாமிமலையில் சம்பவம்
பேருந்தின் சில்லில் சிக்குண்டு பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று மஸ்கெலியா, சாமிமலை கவரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியாவிலிருந்து சாமிமலை நோக்கி இன்று (வியாழக்கிழமை) பயணித்த தனியார் பேருந்திலிருந்து, குறித்த பெண் இறங்க முற்பட்ட வேளையிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் கற்களை வீசி பேருந்தை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்ட போதிலும், பொலிஸாரின் தலையீட்டினால் பதற்றம் தணிந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி …
Read More »