Monday , October 20 2025
Home / செய்திகள் (page 452)

செய்திகள்

News

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சி வரும் திங்கட்கிழமை பேச்சு தொடக்கம்

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு அணியிலும் தலா 7 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு அணி குழுவினரும் வருகிற 24-ந்தேதி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு அணியிலும் தலா 7 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓ.பி.எஸ். அணியில் கே.பி. முனுசாமி …

Read More »

உலகின் மிக வயதான ராணி லிசபெத்துக்கு 91 வயது

உலகின் மிக வயதான ராணி எலிசபெத்துக்கு 91ஆவது வயது பிறந்தது. அதையொட்டி பக்கிங்காம் அரண்மனையில் தனது பிறந்த  கேக் வெட்டி குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடினார். இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி லண்டனில் பிறந்தார். இவரது முழுப் பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி. இவரது தந்தை மன்னர் 4ஆம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் திகதி இங்கிலாந்து ராணியாக முடி …

Read More »

சோமாலியாவில் வரலாறு காணாத பஞ்சம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிகழும் பஞ்சம் அந்நாட்டின் வரலாற்றில் காணாத பஞ்சமாக மாறியுள்ளது. சோமாலியாவில் நிகழும் கடும் பஞ்சத்தால் சுமார் 2,70,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்படவுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் குழந்தைகள் நல உலக அமைப்பான யூனிசெஃப் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் சோமாலியாவில் நிகழும் கடும் பஞ்சத்துக்கு இடையே சுகாதார சீர்கேடு காரணமாக நோய் தொற்று ஏற்பட்டு மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக கார்டியன் செய்தி …

Read More »

சாதாரணதரத் தேர்வு முடிவுகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் படுமோசம்

அண்மையில் வெளியான கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளில், திருகோணமலை கல்வி வலயத்தைச் சேர்ந்த ஐந்து பாடசாலைகளில் இருந்து எந்தவொரு மாணவரும் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016 டிசெம்பர் மாதம் நடைபெற்ற கபொத சாதாரண தரத் தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தன. இந்த தேர்வு முடிவுகளைப் பகுப்பாய்வு செய்த போது, நாடெங்கும் 131 பாடசாலைகளில் இருந்து எந்தவொரு மாணவரும், கபொத உயர் தரம் …

Read More »

குப்பைமேடு சரிந்த இடத்தில் பரவியுள்ள மீதேன் வாயு – ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை

மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த பகுதியில் மீதேன் வாயுவின் அளவு அதிகமாக இருப்பதாக ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீதொட்டமுல்லைவில் கடந்த 14ஆம் நாள் குப்பை மேடு சரிந்த விபத்தில் 32 பேர் மரணமாகினர். மேலும் 30இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில், சிறிலங்கா பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, ஜப்பான் நிபுணர்கள் குழுவொன்றை சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளது. நேற்று முன்தினம் கொழும்பு வந்த ஜப்பானிய நிபுணர்கள் நேற்று இரண்டாவது நாளாக …

Read More »

ஜனாதிபதி கூறினால் அமைச்சில் இருந்து வெளியேறத் தயார்: அர்ஜுன

ஜனாதிபதி எனக்கு இந்த அமைச்சை விட்டுச் செல்லுமாறு கூறினால், செல்லத் தயார் என துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் இந்த அரசாங்கத்தை பெரும் எதிர்பார்ப்புடன் அமைத்தோம். குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பில் நானும் இன்னும் மனவேதனையுடன் தான் உள்ளேன். கடந்த …

Read More »

எத்தனை துன்பங்கள் வந்தாலும் போராட்டம் தொடரும்: முள்ளிக்குளம், மறிச்சிக்கட்டி மக்கள்

பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்யப்படும் வரை நிலமீட்பு போராட்டம் தொடரும் என முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி மக்கள் தெரிவித்துள்ளனர். முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 30 ஆவது நாளாகவும், மறிச்சிக்கட்டி பகுதியில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 26 ஆவது நாளாகவும் தொடர்கின்றன. தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டமும், முசலிப்பிரதேச மக்களின் …

Read More »

இறக்காமத்தில் தொடர்ந்தும் அத்துமீறல்: கிழக்கு சுகாதார அமைச்சர் நேரடி விஜயம்

இறக்காமம் பிரதேசத்தில் ஜந்து பேர் கொண்ட புத்தமதகுருமார் குழுவொன்று தனியார் காணியொன்றிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி பிரவேசித்ததுடன் கட்டிடமொன்றையும் நிர்மாணிக்க முற்பட்டிருந்தனர். சட்டவிரோத சிலை நிறுவல் தொடர்பான சர்ச்சையை மீண்டும் முன்னெடுக்கும் வகையில், சட்டத்தை மீறும் வகையில் காணியினை சுற்றி சுத்தம் செய்தமை தொடர்பாக நேற்றைய தினம் (வியாழக்கிழமை) அப்பகுதி மக்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் நிலைமைகளை …

Read More »

கோப்பாயில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இருவர் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைப் பிராய் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த குற்றச்சாட்டில் கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மது உற்பத்தியை தடுக்க பொது மக்கள் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இதேவேளை குறித்த நபர்களின் வீட்டினை நேற்று (வியாழக்கிழமை) சுற்றிவளைத்த பொலிஸார், 1 இலட்சத்து 61 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு …

Read More »

அரசாங்கத்தினது எந்த உதவித்திட்டங்களும் எமக்குத் தேவையில்லை: பன்னங்கண்டி மக்கள் தெரிவிப்பு

ஒரு மாத காலத்திற்கு மேலாகப் போராடிவரும் எமக்கு, இந்த அரசாங்கம் வழங்கும் வீட்டுத்திட்டம் போன்ற உதவித்திட்டங்கள் தேவையில்லை, நாம் உழைத்து முன்னேறுவோம். என பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர். தமக்கான காணி உறுதியினை மட்டும் தற்போதைக்கு பெற்றுத்தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 31ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கையில், …

Read More »