இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் இன்று டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இரட்டை இலை சின்னம் இருந்தால்தான் அதிக வெற்றியை பெற முடியும் என்று அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள். இந்த நிலையில் …
Read More »டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் – 40 வது நாளான இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய இணை …
Read More »இஸ்லாமிய நாடுகள் இராணுவக் கூட்டணி தலைமை பொறுப்பை ஏற்றது பாக்கிஸ்தான்
இஸ்லாமிய நாடுகள் இராணுவ கூட்டமைப்புக்கு தலைமையேற்பதற்காக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரிப் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிக்கும் விதமாக 41 நாடுகளின் ஒப்புதலுடன் “இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பு’ சவுதி அரேபியா தலைமையில் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையுடன், தீவிரவாதத்தை எல்லா விதத்திலும் ஒழித்துகட்ட இந்தக் கூட்டமைப்பு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்புக்கு பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, குவைத், …
Read More »பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் – புதுவையில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில் புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் பிரான்ஸ் அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்களிக்க அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், அதன் பிராந்தியங்களான …
Read More »மத்திய அரசிற்கெதிராக பிரேரணை கொண்டுவரப்படும்: நசீர் அஹமட்
மாகாண அரசின் அதிகாரத்தைப் பறித்தெடுக்கும் மத்திய அரசின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 25ஆம் திகதி மாகாண சபையில் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிவு தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றது. இந்த நிலையில், மாகாண சபையின் அதிகாரங்களை பறிக்க முயற்சிப்பது எந்த வகையில் நியாயமானது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் …
Read More »நுரைச்சோலை அனல் மின்நிலைய சீரமைப்பு பணிகள் முடிவு
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் முதலாவது மின் பிறப்பாக்கி செயலிழந்திருந்த நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு இன்று (சனிக்கிழமை) வழமைக்கு திரும்பும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள முதலாவது மின் பிறப்பாக்கியில் கடந்த 17ஆம் திகதி, ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைபட்டது. இருப்பினும் இதற்கான மாற்று வழிககள் கடைபிடிக்கப்பட்டாலும், இதன் மீள் திருத்த …
Read More »தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 28-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 28-ந்தேதி காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது என அன்பழகன் தெரிவித்துள்ளார். தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.
Read More »தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியம்
தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியமாக உள்ளது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும், வட.மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் துருக்கி தூதுவர் வினவியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த முதலமைச்சர், “முன்னைய …
Read More »ஊர்காவற்துறை மாணவர்களுக்கு துருக்கி அரசால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு
ஊர்காவற்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட 3 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் துருக்கி நாட்டினால் வழங்கி வைக்கப்பட்டன. துருக்கி நாட்டு அரசாங்கமும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வு, யாழ்.வேலணை மத்திய கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்கா, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஸே;வரன், அமைச்சின் …
Read More »அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் – தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவரும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அரசுப் பணிகளுக்கு திறமை மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மை உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, நேர்மையானவர்களும், அப்பழுக் கற்றவர்களும் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் நிரம்பியிருக்க வேண்டிய மிக …
Read More »