Monday , October 20 2025
Home / செய்திகள் (page 449)

செய்திகள்

News

எரிபொருளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்ததாகவும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் …

Read More »

சிறுவர்கள் – பெண்கள் மீதான வன்முறைகள் குறைவடைந்துள்ளன: மட்டு. பிரதி பொலிஸ்மா அதிபர்

மட்டக்களப்பில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் ஜாகொட ஆராச்சி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் நிலையத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்துக்கான தனியான அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ”சிறுவர்கள் மற்றும் பெண்களின் சமூக நிலைமையை மேம்படுத்துவதற்காக நாம் …

Read More »

அ.தி.மு.க.வில் இணைப்பு முயற்சி: எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை

அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அ.தி.மு.க.வில் பிளவுபட்டுள்ள இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி இன்று நடக்கிறது. ஓ . பன்னீர்செல்வம் அணியையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியையும் இணைக்கும் முதல்கட்ட பேச்சுவார்த்தை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடக்கிறது. இந்த நிலையில் இணைப்பு முயற்சி தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று …

Read More »

இடைத்தரகர் சுகேசுடன் பேசியதை டி.டி.வி.தினகரன் ஒத்துக்கொண்டார்: ஐகோர்ட்டு நீதிபதி என்று நினைத்து பேசினாராம்

டெல்லியில் நடைபெற்ற விசாரணையின்போது, இடைத்தரகர் சுகேசுடன் பேசியதை ஒத்துக்கொண்ட டி.டி.வி.தினகரன், ஐகோர்ட் நீதிபதி என நினைத்து பேசியதாக கூறியுள்ளார். அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற …

Read More »

அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார்: வடகொரியா

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார் என்று வடகொரியா, அமெரிக்காவை மிரட்டி உள்ளது. வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு போய்ச்சேரும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் …

Read More »

வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம்: டிரம்ப்புக்கு சீன அதிபர் ஆலோசனை

கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டிவரும் வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சீன அதிபர் க்சி ஜின்பிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு …

Read More »

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: குறைந்த வாக்குகளை பெற்ற பிரான்கோயிஸ் பில்லான் போட்டியில் இருந்து விலகல்

பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் குறைந்த வாக்குகளை பெற்ற பிரான்கோயிஸ் பில்லான் போட்டியில் இருந்து விலகி தன்னைவிட அதிகமான வாக்குகளை பெற்ற எம்மானுவேல் மக்ரானுக்கு ஆதரவு அளித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் தற்போதைய இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். …

Read More »

சொந்த நிலத்துக்கே உரிமை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது

சொந்த நிலத்துக்கே உரிமை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேச தமிழ்மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வேறு பிரதேச சிங்கள மீனவர்கள் தமது நிலங்களுக்கு தற்போது உரிமை கொண்டாடிவருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். கொக்கிளாய் கடலில் தமது மீன்பிடிக்கான கரைவலைப்பாடுகளை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளமை தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இன்றைய வழக்கு விசாரணைகளில் கொக்கிளாய் மீனவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகாத நிலையில், வழக்கை அடுத்த மாதம் …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், தேங்காய் உடைத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னால் ஏ9 வீதியின் அருகில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டம் இன்று 60 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், …

Read More »

நாட்டில் அதிக வெப்பம்: மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் கொண்ட காலநிலைக்கு ஈடுகொடுப்பதற்கு ஒவ்வொருவரும் அதிகளவில் நீர் பருகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சமிந்தி சமரகோன் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிக உஷ்ணத்தின் காரணமாக உடம்பின் செயற்பாடுகள் பாரிய தாக்கத்துக்கு உள்ளாகின்றன. இதனால், சளியுடன் கூடிய நோய்கள் …

Read More »