ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கான திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது எனவும், அதன் முதற்கட்டமாக தற்போதுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அந்தக் கட்சியின் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக புதிய அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொள்வதற்கு தேர்தல் ஆணையகத்துக்கு விண்ணப்பித்திருக்கும் கட்சிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். …
Read More »வாவியில் நீராடிய சிறுமி முதலையின் பிடிக்குள் சிக்கிப் பலி!
தாய், சித்தப்பா மற்றும் சித்தியுடன் வாவியில் நீராடிக் கொண்டிருந்த 13 வயதுச் சிறுமி முதலையால் கடித்து இழுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிந்துள்ள பரிதாப சம்பவம கல்நேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மூலங்கமுவ வாவியிலிருந்து வரும் ஓடையொன்றில் நேற்றுமுன்தினம் நீராடிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனக் கல்நேவ பொலிஸார் தெரிவித்தனர். கல்நேவ, லோலுகஸ்வெவ கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எம்.ஹிமிஹாமினி அனுஷிகா எனும் 13 வயதுச் சிறுமியே இந்தச் சம்பவத்தில் பலியாகியுள்ளார். பொலிஸாரும் கடற்படையினரும் …
Read More »இன ஒற்றுமையைக் குலைக்க கடும் போக்காளர்கள் சதி! – மட்டக்களப்பில் மைத்திரி விசனம்
“இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டியது மிவும் அவசியமாகும். ஆனால், இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டி இந்த ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு கடும் போக்காளர்கள் சதி செய்கின்றார்கள். எனவே, இந்த விடயம் தொடர்பில் நன்கு சிந்தித்துச் செயற்பட வேண்டியது நாட்டு மக்களின் பொறுப்பாகும்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “இந்த நாட்டில் வாழுகின்ற மூவின மக்களும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காகவே …
Read More »மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை – அமைச்சர்கள் பரபரப்பு பேச்சு
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசு மீது குறைசொல்ல எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். மதுரை கலெக்டர் அலு வலகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தொழிலாளர் நலத்துறை செயலாளர் அமுதா தலைமை தாங்கினார். கலெக்டர் வீரராகவராவ் வரவேற்றார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நிலோபர் கபில் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அமைச்சர் …
Read More »காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் அமைக்க கர்நாடக அரசு திட்டம்: முத்தரசன் பேட்டி
கர்நாடக அரசு காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு நடத்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார். கர்நாடக அரசு காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு நடத்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் புதுக்கோட்டையில் அளித்த …
Read More »அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? – ஓ.பன்னீர் செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை
அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்திவருகிறார். மாலையில் இறுதிமுடிவு தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர் செல்வம் வெளியிடுகிறார். அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார். பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தி …
Read More »மாசிடோனியா பாராளுமன்றத்துக்குள் நுழைந்து சூறை – எம்.பி.க்கள் மீது தாக்குதல்
மாசிடோனியா பாராளுமன்ற சபாநாயகர் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி ஆதரவுடன் அல்பேனிய கட்சியை சேர்ந்த தலாத் சபெரி வெற்றி பெற்றதில் ஆத்திரம் அடைந்த வி.எம்.ஆர்.ஓ-.டி.பி.எம்.என்.இ. கட்சி ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை சூறையாடினர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மாசிடோனியாவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு (வி.எம்.ஆர்.ஓ-.டி.பி.எம்.என்.இ) பின்னடைவு ஏற்பட்டது. அல்பேனிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலை உருவானபோது, ஆளும் கட்சி அதை தவிர்த்தது. இதையடுத்து சமூக ஜனநாயக …
Read More »ஏமனில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்: 8 அல்கொய்தா தீவிரவாதிகள் பலி
ஏமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் 8 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பெண்டகன் தகவல் தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அமெரிக்காவும் இணைந்து கொண்டுள்ளது. இந்நிலையில், ஏமன் …
Read More »எதிர்ப்பை மீறி நடத்தப்பட்ட வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வரும் வடகொரியா இன்று நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்தது. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. ஐ.நா. சபையும் வட கொரியாவுக்கு எதிரான பொருளாதார தடை விதித்துளளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வட …
Read More »சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக இலங்கை மாறியுள்ளது: ஹர்ஷ டி சில்வா
சர்வதேச நாடுகளுக்கு இலங்கை நல்லதொரு முன்னுதாரண நாடாக மாறியுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இன்று மேற்கத்தேய நாடுகள் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை உணர ஆரம்பித்துள்ளன. நாம் கடந்த முப்பது ஆண்டுகளில் எதிர்கொண்ட அனுபவங்கள், எமது மக்கள் அனைவரும் …
Read More »