Thursday , November 21 2024
Home / குமார் (page 17)

குமார்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி கொலை – கேரளாவில் ஒருவர் கைது

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ந்தேதி நடந்த கொலை- கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடநாடு எஸ்டேட்டிற் குள் 2 கார்களில் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் 10-வது நுழைவு வாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம்பகதூரை படுகொலை செய்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை சரமாரியாக வெட்டிய அந்த கும்பல் ஜெயலலிதாவின் அறைக்குள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து …

Read More »

சிரியா-ஈராக்கில் குர்து பகுதியில் துருக்கி குண்டுவீச்சு: 23 பேர் பலி

சிரியா, மற்றும் ஈராக்கில் உள்ள குர்து பகுதிகள் மீது நேற்று துருக்கி போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தினார்கள். இதில் குர்து இனத்தை சேர்ந்த 23 பேர் பலியாயினர். ஈராக் மற்றும் சிரியாவின் வட பகுதிகளில் குர்து இனத்தவர் அதிக அளவில் உள்ளனர். இப்பகுதியில் குர்து இன மக்கள் தன்னாட்சி அதிகாரத்துடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆதரவுடன் அமெரிக்காவும், ரஷியாவும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். ஆனால் குர்து …

Read More »

அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தென்கொரியா வருகை: வடகொரியா ராணுவ பயிற்சியால் போர் பதட்டம்

அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தென் கொரியா வருகையாலும், வட கொரியா ராணுவ பயிற்சியாலும் கொரிய தீபகற்பத்தில் போர்பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஐ.நா.வின் உத்தரவு மற்றும் பொருளாதார தடையை எதிர்த்து வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியா மீது தீவிர நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். தற்போது …

Read More »

வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ள ஏவுகணை எதிர்ப்பு கவன் அமைப்பதில் அமெரிக்கா தீவிரம்

ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில் வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணை தடுப்பு கவன் அமைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச …

Read More »

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் – டி.டி.வி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம்

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக நேற்றிரவு கைதான டி.டி.வி தினகரன் இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார். அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் …

Read More »

டி.டி.வி. தினகரன் கைதை தொடர்ந்து மேலும் பல பெரிய தவறுகள் வெளிவரும் – மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

டி.டி.வி. தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் போலீசார் அவரை கைது செய்தனர். கைதை தொடர்ந்து மேலும் பெரிய தவறுகள் வெளிவரும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- டி.டி.வி. தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லியில் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். அது தான் உச்சம் என்று சொல்ல முடியாது. மேலும் இது …

Read More »

விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி – கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒன்றிணைந்து போராடுவோம் – மு.க.ஸ்டாலின்

விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒன்றிணைந்து போராடுவோம் என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்,. தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய மாநில அரசுகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் விவசாயப் பெருங்குடி மக்களை பாதுகாத்து அவர்களின் உரிமைகளை மீட்க வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் மூலம் தி.மு.க. முன்னெடுத்த முழு அடைப்புப் …

Read More »

குடிசை மாற்று வாரியத்தில் என்ஜினீயர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

குடிசை மாற்று வாரியத்தில் என்ஜினீயர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் 64 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 17 இளநிலைப் பொறியாளர்களை தேர்வு செய்யும் பணி அண்ணா பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக் கழகம், கடந்த 29.01.2017 அன்று எழுத்துத் தேர்வு நடத்தி, அதில் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் 1:5 …

Read More »

சசிகலா பேனர் அகற்றியது வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான இணக்கமான சூழல் – கே.பி.முனுசாமி

சசிகலா பேனர் அகற்றியது வரவேற்கத்தக்கது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான இணக்கமான சூழல் உருவாகியுள்ளதால் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கே.பி.முனுசாமி கூறினார். அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் தொடங்குகிறது. இதில் ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி அணி சார்பில் தலா 7 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று பேசுகிறார்கள். அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்று தொடங்குவதையொட்டி ஓ.பி.எஸ். அணியினர் இன்று காலை ஆலோசனை நடத்தினார்கள். கிரீன்வேஸ் சாலையில் …

Read More »

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றி – வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றியை தேடித் தந்த வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி மாநகராட்சி முன்பு ஒரே மாநகராட்சியாக இருந்தது. 2012-ம் ஆண்டு வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மாநகராட்சியாக பிரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி நடந்தது. இந்த 3 மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. வடக்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சியில் …

Read More »