நல்லிணக்கம் நல்லாட்சி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பெயரளவில்தான் உள்ளதென்று, உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் நடைபெற்ற நிகழ்வில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில் குற்றம் சாட்டியுள்ளார். சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை அடிப்படை மனித உரிமையாகப் புதிய யாப்பில் உறுதிப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட 21 ஆவது உலக மீனவர் தின நிகழ்வுகள் மன்னார் நகர …
Read More »மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படமாட்டார்கள்!
மாவீரர் தினத்தை அனுஸ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ள போதும், அவ்வாறு கைதுசெய்யப்படமாட்டார்கள் என தான் நம்புவதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ‘மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைதுசெய்யப்படுவர் என அரசு தெரிவித்தாலும்,அவர்களால் இதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று நாம் நம்புகிறோம் ஏனெனில் இவ்வாறான அனுஷ்டானங்களுக்கு அரசே இடமளித்துள்ளதாகவும், அவர் …
Read More »உருவாகிறதா சூறாவளி? எதிர்வுகூறும் வானிலை அவதான நிலையம்
இலங்கைக்குத் தென்மேற்குத் திசையில், அரேபியக் கடலில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம், அடுத்த சில மணிநேரங்களில் புயல் காற்றாக உருமாறக்கூடும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இலங்கைக்கு சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் உருவாகியிருக்கும் இத்தாழமுக்கம் நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகள் ஊடாகக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாட்டின் அனேக பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று என்பன ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை …
Read More »முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு கொரியாவில் இருந்து ஜனாதிபதி பணிப்பு
நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை முன்னெடுக்க முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவில் இருந்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தென் கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, தொலைபேசியூடாக மேற்கண்டவாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Read More »சாரதிகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கை.!
இலங்கைக்கு தென்மேற்குக் கடலில் உண்டாகியிருக்கும் காற்றழுத்தம் கடும் தாழமுக்கமாக மாறியிருக்கிறது. கொழும்புக்கு சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இத்தாழமுக்கம் மேலும் வலுப்பெற்று இலங்கையைக் கடந்து அரேபியக் கடல் பிராந்தியத்தை அடையவிருக்கிறது. இதனால், இன்று முழுவதும் தற்போதைய சீரற்ற காலநிலையே தொடரும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களை 60 கிலோமீற்றர் வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை …
Read More »நிரம்பி வழியும் கெசல்கமுவ! குடும்பங்கள் வெளியேற்றம்!!
கடும் மழையின் எதிரொலியாக ஹட்டன், கெசல்கமுவ ஆற்றின் நீரேந்துப் பகுதிகள் நிரம்பி வழிவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு அதிகரித்து வருவதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொகவந்தலாவ எஸ்டேட், நோர்வூட் ஆகிய பகுதிகளில் வீடுகள் சில வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் வாழும் சுமார் 68 குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தேங்கும் நீரின் அளவு அதிகரித்து வருவதையடுத்து கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று …
Read More »தன்னிச்சையாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐ.நா. செயற்குழு இலங்கை வருகிறது.!
தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் மூவர் கொண்ட உறுப்பினர்கள் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். நாட்டின் மனித உரிமை நிலைமை குறித்து ஆராய்ந்து மதிப்பிடும் நோக்கிலேயே இந்த செயற்குழுவின் விஜயம் அமையவுள்ளது. ஜோஸ் அன்டோனியோ லீ டூமி மற்றும் எலினா ஸ்டீனிர்ட் ஆகிய மூவரே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். ஐககிய நாடுகளின் இந்த …
Read More »போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்
உலக நாடுகளின் எதிர்ப்பு, தொடர் பொருளாதார தடைகள் என எதையும் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. அந்த நாடு அணுகுண்டுகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி சோதித்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டு வருகிற வடகொரியாவை தடுத்து நிறுத்த அமெரிக்கா கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ஆசிய நாடுகளுக்கு நீண்டதொரு …
Read More »போர்க்குற்றத்தில் ஈடுபட்டது நிரூபணம் செய்யப்பட்டதால் நீதிபதி முன்னே விஷம் அருந்தி முன்னாள் ராணுவ தளபதி தற்கொலை
கடந்த 1992 – 1995 ஆண்டுகளில் நடந்த போஸ்னியா போரின் போது குறிப்பிட்ட இனத்தவர்கள் போர் நெறிமுறைகளை மீறி படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. போரின் போது 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐநா தீர்ப்பாயம் ஒன்றை அமைத்தது. இந்த போர் நடைபெற்ற சமயத்தில் போஸ்னிய ராணுவத்தின் தளபதியாக செயல்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்பட 6 பேர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக …
Read More »மின்தடை : திருத்தப்பணிகள் தாமதமாகுமாம் !
மின்தடை ஏற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப்பணிகளில் தாமதமேற்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்றபட்ட கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையையடுத்து மரங்கள் முறிந்து மின்சாரக்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்பு வயர்கள் மீது விழுந்துள்ளதால் நாட்டின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ள கொழும்பு, மாத்தறை, காலி, பதுளை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள மின்சாரத்தை மீளவழங்குவதில் தாமதமேற்பட வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. …
Read More »