Wednesday , October 15 2025
Home / தமிழவன் (page 85)

தமிழவன்

ஆர்.கே.நகரில் களமிறங்குகிறார் விஷால்: திமுக, அதிமுக அதிர்ச்சி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இன்று இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளருமான விஷால் ஆர்கே நகர் இடைதேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குகிறார் என்றும், வரும் திங்கள் அன்று அவர் மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆர்.கே.நகரில் சுயேட்சையாக …

Read More »

தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையே கலவரத்தை உண்டுபண்ண வேண்டாம்

வவுனியாவில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஒன்றை தூண்டுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அவர்களை இனம் கண்டு எமது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி தெரிவித்தார். வவுனியா நகர கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்றுகாலை 10 மணியளவில் வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி , வவுனியா நகர், வைரவர்புளியங்குளம் ,கற்குழி,தோணிக்கல் மற்றும் வைரவர்புளியங்குளம் சிவில் அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடலைன்றை நடத்தினார். இக்கலந்துரையாடலில் உரையாற்றிய போதே …

Read More »

பிரஜைகளின் தனியுரிமை பாதுகாப்புச் சட்டம் ; பிரதமர் ஆலோசனை

நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலான விதிவிதானங்கள் அடங்கிய விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசணையின் பிரகாரம் இந்த விஷேட சட்ட வரைபு கொண்டுவரப்பட உள்ளது. தனிநபர் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டல் மற்றும் தனிநபர் அடையாளத்தை அச்சுறுத்தும் வகையில் செயற்படல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக விஷேட சட்ட வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ஒதியமலை படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று படுகொலை நடைபெற்ற இடத்தில் இராணுவத்தால் இடித்து அழிக்கப்பட்ட நினைவுத்தூபி ,அமைத்திருந்த இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற …

Read More »

143 நாள் வீதியில் இருந்தும் தலைவிதி மாறவில்லை – வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவலை

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (02.12.2017) காலை 9.30 மணியளவில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. இப் போராட்டத்தில் கலந்து கொண்ட வேலையற்ற பட்டதாரிகள் 20,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நியமனம் எங்கே?, எதிர்கட்சி தலைவரே ஏன் மௌனம், நியமன இழுத்தடிப்பு எதற்காக?, அரசே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே?, 143 நாள் வீதியில் இருந்தோம் தலைவிதி மாறவில்லை, பேச்சுவார்த்தை போதும் நியமனம் வழங்கு, …

Read More »

மட்டக்களப்பில் மீனவர்களின் வலைகளில் பாம்புகள்

மட்டக்களப்பு – நாவலடியில் இன்று காலை கரவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் சிக்கியிருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக் கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் …

Read More »

எதிர்வரும் ஐந்தாம் ஆறாம் திகதி வானிலை அறிவிப்பு

தற்போது தெற்கு அந்தமான் தீவிற்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் தினங்களில் அதிகரித்து மத்திய வங்காள விரிகுடா ஊடாக இந்தியாவிற்குள் நுழைவதை காணமுடியும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி டிசம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இது இலங்கையின் கிழக்கு திசையில் நாட்டுக்கு அருகில் பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களினால் இதன் பயணப்பாதை மாற்றமடையலாம் என்பதுடன், இதன் புதிய நிலை …

Read More »

மைத்திரி – மஹிந்த இணைய வேண்டும்- தி.மு.ஜயரட்ன

மைத்திரி மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து சிறிலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அந்த கட்சி பிளவுபடும் நிலையில் இருந்த போதும் தற்போது வரை உடையாமல் பயணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

Read More »

வடக்கு கிழக்கில் 50 ஆயிரம் வீடுகள்

வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கான கேள்விப்பத்திர திறப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த வீட்டுத் திட்டத்துக்காக சுமார் 40 நிறுவனங்கள் கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளன. இந்த கேள்விப் பத்திரங்கள் கடந்த மாதம் திறக்கப்பட முடிவுசெய்திருந்தபோதும், அந்தப் பணிகள் பிற்போடப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த கேள்விப்பத்திரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்பட உள்ளதாக தேசிய …

Read More »

பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபா!

கடந்த 11 மாத காலப்பகுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலருடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 2.5 வீதம் அமெரிக்க டொலர் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வங்கி குறிப்பிட்டுள்ளது. யூரோவுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 13.3 வீதம் ரூபாய் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் வங்கியின் பெறப்பட்ட முழுமையான சொத்தின் பெறுமதி 9.6 …

Read More »