ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய விஷாலின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில் அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அரசியல் தலைவர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் இன்று கமல்ஹாசனை சந்திக்கும் விஷால், அதனையடுத்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்கவுள்ளார். மேலும் அவர் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஒருவேளை ஆர்.கே.நகரில் …
Read More »விஷால் வேட்புமனு மீண்டும் நிராகரிப்பு!
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற செய்தி வெளிவந்ததில் இருந்தே ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கதிகலங்கியது. எப்படியாவது விஷாலை போட்டியில் இருந்து விலக்கி விட வேண்டும் என்பதில் இருகட்சிகளும் ஒன்றிணைந்தது. விஷாலின் வேட்புமனு நேற்று பரிசீலனைக்கு வந்தபோது திமுகவும், அதிமுகவும் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே இரு கட்சிகளின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. இந்த நிலையில் முதலில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்ததாக கூறிய தேர்தல் அதிகாரி பின்னர் அவரது …
Read More »3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
கடந்தவாரம் தென் தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளை தாக்கிய ஒகி புயல் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி திரும்பி உள்ளது. அந்த புயல் வலுவிழந்து நள்ளிரவிலோ அல்லது இன்று(புதன்கிழமை) காலையிலோ சூரத் அருகே கரையை கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஒகி புயல் குஜராத்தை தாக்கும் என்பதால் குஜராத், மராட்டிய மாநில மீனவர்கள் 6-ந்தேதி(இன்று) முதல் 8-ந்தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் …
Read More »காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி 11-ந் தேதி அறிவிக்கப்படுகிறார்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 1998-ம் ஆண்டு முதல் 19 ஆண்டுகளாக அப்பதவியை வகித்து வருகிறார். அவருக்கு உடல்நிலை சரி இல்லாததால், காங்கிரஸ் துணைத்தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்திக்கு பதவி உயர்வு அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீர்மானித்தனர். அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 4-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம், ராகுல் காந்தி தனது வேட்புமனுவை …
Read More »பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் தெரசா மே. இவரை கொல்வதற்காக டவுனிங் தெருவில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் 28ந்தேதி தீவிரவாத ஒழிப்பு படையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் வடக்கு லண்டனை சேர்ந்த ஜகரியா ரெஹ்மான் (வயது 20) மற்றும் தென்கிழக்கு பிர்மிங்காம் நகரை சேர்ந்த …
Read More »சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிப்பு
கிளிநொச்சி – அக்கராயன் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நீண்ட பொருங்காட்டு பகுதிக்குள் நுழையும் அடையாளம் தெரியாத கும்பலொன்று அப்பகுதியில் உள்ள பாலை, முதிரை உள்ளிட்ட பெறுமதியான மரங்களை அழித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த காட்டு பகுதியிலுள்ள பெரிய மரங்களில் மர்மக்குறியீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு குறித்த அடையாளம் தெரியாத கும்பல் அந்த காட்டுப் பகுதியிலயே தங்கி இருக்கும் …
Read More »கடற்படையினர் கைது செய்த 25 மீனவர்களை மன்னார் நீதவான் விடுதலை செய்தார்.
மன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில், குறித்த மீனவர்கள் இன்று மதியம் மன்னார் நீதிமன்றில் ஆஜராகிய போது குறித்த மீனவர்களை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா விடுதலை செய்தார். மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 …
Read More »மாணவருடன் பூங்காவில் உடலுறவு கொண்ட இந்தியா வம்சாவளி ஆசிரியை
28 வயது பள்ளி ஆசிரியை ஒருவர், 16 வயது கொண்ட மாணவருடன் திறந்த வெளி பூங்காவில் உடலுறவு கொண்டதால் தற்போது சிறைக்கு செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளார். பள்ளி மாணவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் நெருக்கமாக பழகி, ஆசிரியைகள் தனது படுக்கையை பகிருந்து கொள்ளும் பழக்கும் வெளிநாடுகளில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. ஆனால், இதை சிறுவர்களுக்கு எதிரான குற்றம் என மேலை நாட்டு சட்டங்கள் சொல்கிறது. எனவே, அந்த ஆசிரியைகள் …
Read More »பச்சிளம் குழந்தையின் சடலத்தை வாயில் கவ்விச் சென்ற நாய்!
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தையின் சடலத்தை நாய் வாயில் கவ்விச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாகர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்நிலையில், மருத்துவமனைக்கு வெளியே, நாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் சடலத்தை வாயில் கவ்விச் சென்றதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக அரசு …
Read More »அம்மன் கோயில் பின் வீதியில் புத்தர் சிலை!
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் கோயிலின் பின்புற வீதியில் உள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு பலராலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றபோதும் இன்றுவரை அகற்றப்படவில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது. பதிலாக இரணைமடுக் குளத்துக்கு அருகிலிருந்த சிலையையே அகற்றியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இரணைமடுக் குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையும் அகற்றப்பட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் போரின் பின்னர் இராணுவத்தினர் …
Read More »