பருத்தியடைப்பு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் செழியன் வீதி, ஓட்டு மடத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை ஆனந்தநாதன் நேற்று (08.12.2017) வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் நாகரெத்தினத்தின் (அம்பாள்) அன்புக்கணவரும் ஆசைப்பிள்ளை அன்ன பூரணம் தம்பதியரின் கனிஸ்டபுத்திரனும் காலஞ்சென்ற வர்களான அருணகிரிநாதன், அருந்ததியம்மா மற்றும் பழனிநாதன், அமிர்தசெல்வநாயகி ஆகியோரின் சகோ தரரும் ஆனந்தரூபி, ஆனந்தகௌரி, செல்வானந்தன், லோகானந்தி ஆகி யோரின் அன்புத்தந்தையும் பாலச்சந்திரன், நவநீதராஜா, ஜீவரஞ்சினி, கிரிகரன் ஆகி யோரின் மாமனாரும் மயூரன், …
Read More »ஆர்.கே.நகரில் தினகரனுக்கு பெருகும் ஆதரவு
ஆர்.கே.நகரில் பிரச்சாரத்திற்கு செல்லும் டிடிவி தினகரனுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அதே தொகுதியில் தினகரன் போட்டியிட்டார். சூறாவளி பிரச்சாரமும் செய்தார். ஆனால் பணப்பட்டுவாடா தொடர்பான புகார் எழுந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டது. தற்போது அதே தொகுதியில் தினகரன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுகவின் சின்னமான இரட்டை இலை கைவிட்டுப் போனது. மேலும், தொப்பி, விசில், கிரிக்கெட் மட்டை என அவர் கேட்ட எந்த சின்னமும் …
Read More »வடக்கில் தனியரசு
புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வடக்குக்கு முதலீடுகள் அவசியம் எனில், வடக்கை தனி அரசாகப் பிரித்துத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். ‘வெளிநாடுகளில் புலம்பெயர் சமூகத்தினர் செல் வச் செழிப்போடு வாழ்கின்றனர். ஆடம்பர விடுதிகள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த விடயங்களுக்காக அவர்கள் வடக்கில் …
Read More »கழிப்பறை வசதி கொண்ட பிரதேசம் ஆறு ஆண்டுகளாகப் பூட்டிய நிலையில்!
கிளிநொச்சியில் 2010ஆம் ஆண்டில் கரைச்சிப் பிரதேச சபையினால் சந்தை அமைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட 5 கழிப்பறை வசதிகள் கொண்ட பிரதேசம் 6 ஆண்டுகளாகப் பூட்டிய நிலையில் காணப்படுகின்றது எனவும் இதனால் கழிப்பறைகளும் பாழடைகின்றன எனவும் சுட்டிக்காட்டப்படு கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் போருக்குப் பின்னர் மீளக்குடியமர்ந்த காலத்தில் மக்கள் போக்குவரத்து இடையூறு காரணமாக வாழ்விடங்களுக்கு அண்மையில் தமக்கான அங்காடிகளை அமைக்க முற்பட்டவேளையில் கரைச்சிப் பிரதேச எல்லைப் பரப்புக்குள் ஏ- 9 வீதியின் …
Read More »இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் கைது
வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை நெளுக்குளம் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். நெளுக்குளம், குழுமாட்டுச்சந்தி, காத்தான் கோட்டம், தாஸ்கோட்டம், ஊர்மிளா கோட்டம், கூமாங்குளம் போன்ற பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி ஏ. எம். எஸ். அத்தநாயக்க அவர்களின் தலமையிலான பொலிஸ் குழு குறித்த நபரை …
Read More »வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் படுகாயம்
வவுனியாவில் இன்று மாலை கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வன்னி விமானப்படைத்தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மாலை 4 மணியளவில் வன்னி விமானப்படை தளத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த விமானப்படை வீரரை நுவரெலியாவிலிருந்து வந்த மோட்டார் கார் மேதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வன்னி விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
Read More »2018க்கான வரவு-செலவுத் திட்டம் மன்றில் நிறைவேற்றம்
எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் பாராளுமன்றில் சற்று முன் நிறைவேற்றப்பட்டது. 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த மாதம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் சபையில் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, உத்தேச வரவு-செலவுத் திட்டத்தின் மீதான விவாதங்கள் கடந்த சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. உத்தேச வரவு-செலவுத் திட்டத்தின் மீதான மூன்று கட்ட வாக்கெடுப்பின் இறுதி வாக்கெடுப்பு சற்று முன் பாராளுமன்றில் நடைபெற்றது. இதில், வரவு-செலவுத் …
Read More »கூட்டமைப்பில் சமரசம்
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடகிழக்கில் தனித்துக் களமிறங்க தீர்மானித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட ஆசனப் பகிர்வு தொடர்பான முரண்பாடுகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
Read More »ஆர்.கே.நகரில் இரட்டை இலை தினகரனிடம் தோல்வி அடையும்; கருத்துக்கணிப்பில் தகவல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் டிடிவி தினகரனிடம் இரட்டை இலை சார்ப்பில் போட்டியிடும் மதுசூதனன் தோல்வி அடைவார் என பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு 7 வார்டுகளில் இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என பல தரப்பிலிருந்தும் …
Read More »8 கோடி ரூபா பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல்!
சட்டவிரோதமாக நாட்டுக்குள் எடுத்துவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்களை சுங்க அதிகாரிகள் நேற்று (8) மாலை பறிமுதல் செய்தனர். மொத்தமாக பதினாறு இலட்சம் சிகரட்டுக்கள் அடங்கிய இந்தத் தொகையின் பெறுமதி சுமார் எட்டுக் கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிகரட்டுகள் டுபாயில் தயாரிக்கப்பட்டவை என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More »