சோனியா காந்தி சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் அவரால் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. மூத்த நிர்வாகிகளை வீட்டுக்கு அழைத்து கட்சி தொடர்பாக ஆலோசனை வழங்கி வந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக 11–ந் தேதி ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று (சனிக்கிழமை) முறைப்படி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கிறார். …
Read More »இந்திய- பாகிஸ்தான் போர் வெற்றி தினம்
1971-ம் ஆண்டு நடந்த இந்திய- பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் ராணுவம் தானாக முன்வந்து இந்தியாவிடம் சரணடைந்தது. இதையடுத்து கிழக்குப் பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதி ‘வங்காளதேசம்’ என்ற தனி நாடாக உருவானது. இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளன்று, இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி இந்தியவாயிலில் (இந்தியா கேட்) உள்ள அமர் ஜவான் …
Read More »இந்தோனேஷியா ஜாவா தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. கடலுக்கடியில் சுமார் 91 கி.மீ. …
Read More »பொதுஜன பெரமுன நீதிமன்றம் செல்கிறது
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு சபைகளுக்கு தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் அக்கட்சி அடுத்தவாரம் உயர்நீதிமன்றம் செல்வதற்கு தீர்மானித்துள்ளது. அகலவத்தை, பதுளை, பாணந்துறை, மஹியங்கனை, மஹரகம, வெலிகம ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொதுஜன பெரமுன தாக்கல் செய்த வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் சிறு சிறு தவறுகள் மாத்திரம் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாம் …
Read More »பாதிக்கப்பட்டோரின் பங்களிப்பு அவசியம் : ஐ.நா. குழு வலியுறுத்தல்
காணாமல் போனோர் தொடர் பில் ஆராய்வதற்கான அலுவல கம் உடனடியாக தொழிற்பாட்டுக்கு வரவேண்டும். இதனை அரசாங்கம் விரைந்து உறுதிப்படுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தை செயற்படுத்தும் செயற்பாட்டில் பாதிக்கப்பட்டோர், சிவில், சமூக அமைப்பினர் இடம்பெறவேண்டியது அவசியமாகும் என்று இலங்கைக்கு விஜயம் செய்த தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங் கம் உடனடியாக நீக்கவேண்டும். தாமதமின்றி அந்த …
Read More »அருவி – திரைவிமர்சனம்!!
ஹிரோ இல்லாமல் அறிமுக நாயகி அதிதி பாலன் நடிப்பில், அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், பிந்து மாலினி- வேதாந்த் பரத்வாஜ் இசையில், ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவில் வெளியாகி இருக்கும் படம் அருவி. பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் அதிதி பாலன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் தோழியுடனான நட்பால் பப், பார்ட்டி என ஜாலியாக இருக்க, ஒருநாள் உடல் நிலை சரியில்லாமல் போகிறது. மருத்துவமனை சிகிச்சைகாக செல்லும் …
Read More »அமெரிக்காவின் தலையெழுத்து
அமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளது. இந்நிலையில், வடகொரியா வெளியிட்டுள்ள செய்தி ஒன்று மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இது ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் இதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எனவே, வடகொரியா மீது பல பொருளாதார …
Read More »குரூப் 4 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிக்கையை நவம்பர் 14ம் தேதி வெளியிடப்பட்டு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 13 என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக மின்சாரம் சுமார் ஒருவார காலம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆன்லைனில் இந்த பணிக்கு பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை இதனால் குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால …
Read More »டெங்கு பாதிப்பில் தமிழகம் முதலிடம்
மத்திய சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் இந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வருடத்திற்கு வருடம் டெங்குவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. டெங்கு என்பது ஒருவரின் உயிரையே பறிக்கக்கூடிய ஒரு கொடிய நோயாகும். இந்நோய் ஏடிஸ் ஏகிப்டி(AEDES AEGYPTI) என்ற ஒரு வகை கொசுவால் பரப்பப்படுகிறது. 2014-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு 2 ஆயிரத்து 804 பேரும், 2015-ம் …
Read More »ஜெயலலிதா மர்ம மரணம் ?
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சுமார் 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு சார்பில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தற்போது விசாரணையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன்படி, ஜெயலலிதாவின் …
Read More »