Tuesday , October 14 2025
Home / தமிழவன் (page 58)

தமிழவன்

ஆர்.கே.நகர் வாக்குப்பெட்டிகள் எங்கே உள்ளன?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் இன்று ஒருவழியாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று பதிவான வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. இந்த நிலையில் இன்று பதிவான மின்னணு இயந்திரங்கள் கொண்ட வாக்குப்பெட்டி பலத்த பாதுகாப்புடன் சென்னை ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் உட்பட 50க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் இரவுபகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட …

Read More »

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ ஆகிறார் தினகரன்?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே இருந்தது. மேலும் இன்று 2ஜி வழக்கின் தீர்ப்பும் சாதகமாக வந்துள்ளதால் திமுக எளிதில் வெற்றி பெறும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர் ஆனால் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன் முடிவுகளின்படி பார்த்தால் டிடிவி தினகரன் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று தெரிகிறது. இந்த கருத்துக்கணிப்பில் …

Read More »

திவ்யதர்ஷினி விவாகரத்து பெற இதுதான் காரணமா?

தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது கணவர் ஸ்ரீகாந்தை விவாகரத்து செய்ததற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது. டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது ஆண் நண்பர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், தம்பதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், டிடி அதை மறுத்து வந்தார். இந்நிலையில் அது உண்மைதான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. …

Read More »

ஜெயலலிதா தொடர்பான பல வீடியோக்கள் டிடிவி தினகரன் வசம்

பரிசுப் பொருள் தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்பான பல வீடியோக்கள் டிடிவி தினகரன் வசம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைபாடு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். அவரின் மரணத்தில் தொடர்ந்து பல சந்தேகங்களும், மர்மங்களும் நிலவுகிறது. காரணம், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த வரை அவரின் புகைப்படமோ, வீடியோவோ வெளியாகவில்லை. தற்போது அவரின் மரணம் குறித்து விசாரணை செய்ய தமிழக …

Read More »

2ஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் கனிமொழி, ஆர்.ராசா ஆகியோரை விடுவித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம்சாட்டியது. இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2011 …

Read More »

ஆர்.கே.நகரில் 7.32 சதவீத வாக்குகள் பதிவு…

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், தொகுதி முழுவதிலும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 258 வாக்குச்சாவடி மையங்களில் 1600 மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், வாக்களித்தவர்களுக்கு எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்ற ரசீது கொடுக்கும் மிஷினும் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது இன்று …

Read More »

ஈரானில் நிலநடுக்கம்

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் தென்மேற்கே மெஷ்கிண்டாஷ்ட் நகர் அமைந்துள்ளது. இங்கு 5.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இந்நிலநடுக்கம் தெஹ்ரான் உள்பட ஈரானின் வடக்கே பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் சென்றுள்ளனர். கடந்த நவம்பரில் மேற்கு ஈரானில் 7.2 அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 600க்கும் மேற்பட்டோர் …

Read More »

ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன் தொடங்கியது. இதனையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர்களுடன் போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக 50 இடங்களில் 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 950 துணை ராணுவப் படையினர் மற்றும் 3300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவின்போது எந்தவித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பதை கணக்கில் கொண்டும், அமைதியாக …

Read More »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : நேரடி ஒளிபரப்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர்களுடன் போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவின்போது எந்தவித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பதை கணக்கில் கொண்டும், அமைதியாக தேர்தலை நடத்தும் வகையிலும் வாகுப்பதிவை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வாக்குப்பதிவின் போது தகராறு செய்பவர்கள், வாக்களிப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் உடனடியாக கைது …

Read More »

சிம்பு, தனுஷ் குறித்து ஓவியா கூறியது என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஓவியா நேற்றிரவு தனது ரசிகர்களுடன் வீடியோ சேட் மூலம் உரையாடினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்து வந்ததால் #AskOviyasweetz என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது இந்த நிலையில் தனுஷ், சிம்பு குறித்து ஓரிரு வார்த்தைகள் கூறும்படி ஓவியாவிடம் ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு பதிலளித்த ஓவியா, ‘சிம்பு ஒரு மனிதநேயம் மிக்கவர், தனுஷ் ரொம்ப நைஸ் …

Read More »