அதிமுக சார்பில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள மாவட்ட செயலாளர்களை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து இன்று தற்போது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தினகரனுக்கு ஆதரவாக உள்ள மாவட்ட …
Read More »ஆவா குழுவை உருவாக்கியது புலிகளல்ல!
யாழ்ப்பாணத்தில் தற்போது உருவாகியிருக்கும் ஆவா குழுவுக்கும் புலிகளுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என யாழ்.பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.டி.கே. ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ‘ வடமாகாணத்தில் தற்போது விடுதலைப்புலிகள் இல்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின் விடுதலைப்புலிகள் இலங்கையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்திய திரைப்படங்களின் தாக்கம் மற்றும் மதுபாவனை, போதைப்பொருள் பாவனை என்பவற்றாலேயே ஆவா குழு உருவாகியுள்ளது. இவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்புகள் இல்லை என …
Read More »சுமந்திரன் புதிய அரசில் உத்தியோகப்பற்றற்ற அமைச்சர்!
தமிழரசுக்கட்சி ஊடகப்பேச்சாளர் எம்.சுமந்திரன் புதிய அரசில் உத்தியோகப்பற்றற்று அமைச்சு பதவியினை ஏற்றிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பிலிருந்து வெளியாகும் முன்னணி நாளிதழான டெயிலி மிரர் இலங்கைக்கான ஜெர்மனிய தூதர் சந்திப்பில் அமைச்சரான சுமந்திரன் பங்கெடுத்ததாக கடந்த 19 ஆம் திகதி நிழற்படமொன்றை பிரசுரித்து செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து கொழும்பு தொலைச்காட்சியான சக்தி தொலைக்காட்சி இதனை வெளிப்படுத்தி சுமந்திரனிற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளது. தமிழர் விடயங்களை விட ஆளும்தரப்பு விடயங்களில் அதிக …
Read More »கள்ளக்காதல் தகராறில் வாலிபர் குத்திக்கொலை டாக்டர் கைது
சென்னை கிண்டியை சேர்ந்தவர் செந்தில்ராஜ் (வயது 42). பல் டாக்டரான இவர், ஒரு நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மனைவியை விவாகரத்து செய்தவர். இருப்பினும் முன்னாள் மனைவியுடன் அவர் நட்புணர்வுடன் பேசி வந்ததாக தெரிகிறது. செந்தில்ராஜின் முன்னாள் மனைவி சென்னை கிண்டியில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சஞ்சீவ்ராஜ் (33) என்பவர் வேலை பார்த்து வந்தார். இதில் சஞ்சீவ்ராஜிக்கும், செந்தில்ராஜின் …
Read More »ஜனவரியில் அரசியல் அறிவிப்பை வெளியிடும் ரஜினி-கமல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஜனவரி 1ஆம் தேதி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அவரது அரசியல் ஆலோசகரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் நேற்று கூறினார் இந்த நிலையில் கிட்டத்தட்ட அதே நாளிலோ அல்லது அதற்கு அடுத்த ஒருசில நாட்களிலோ கமல்ஹாசனும் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடவுள்ளாராம் இதுகுறித்து கமல் நற்பணி மன்ற பொறுப்பாளர் கோவை தங்கவேல் கூறியபோது, ‘அரசியல் …
Read More »கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாள்
கிறிஸ்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 24 ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். கிறிஸ்து பிறப்புவிழாவிற்கு அடையாளமாக நானல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை இயேசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர் விண்மீன்களுக்கு அடையாளமாக காகதித்தாலான விண்மீன்களை …
Read More »எதற்கெல்லாம் கற்றாழை ஜெல் பயன்படுகிறது தெரியுமா!
கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது. கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் …
Read More »கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் யார் தெரியுமா?
குட்டையான, குண்டான உருவம், வெண்மையான தாடி, சிவப்பு வெல்வெட் உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர்தான் கிறிஸ்துமஸ் தாத்தா. கிறிஸ்மஸ் தாத்தா வாகனம் இனிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் இருப்பதுபோல் காட்டப்படும், அதை எடுத்து கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார். மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை …
Read More »ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் – தினகரன் முன்னணி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்றில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னணியில் இருக்கிறார். ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் உள்ள 2,28, 234 வேட்பாளர்களில் 1, 76,885 வாக்குகள் பதிவானது. அதாவது 77 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில், மொத்தம் 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக …
Read More »
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்….
சென்னை ஆர்.கே.நகரின் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகி வருகிறது. ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 50க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், குக்கர் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. …
Read More »