Wednesday , October 15 2025
Home / தமிழவன் (page 43)

தமிழவன்

பொங்கல் ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல் மற்றும் மெது வடை செய்ய…!

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப் பொடித்த வெல்லம் – கால் கப் பால் – ஒரு லிட்டர் பயத்தம்பருப்பு – கால் கப் நெய் – கால் கப் முந்திரி – 10 திராட்சை – 25 கிராம் ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன் செய்முறை: அரிசி, பருப்பை சுத்தம் செய்து பாலுடன் சேர்த்து குழைய வேக வைக்கவும் (அல்லது பால் நன்கு பொங்கி வரும்போது, சுத்தம் செய்த …

Read More »

தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் தைத்திருநாள் மகத்துவமும், சிறப்புகளும்!

பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாக இது கருதப்படுகின்றது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. நன்றி கூறும் திருவிழாவாக தைப்பொங்கல் அமைவதனால் அனைத்து மக்களிடத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக தைப்பொங்கல் அமைந்துள்ளது. பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது …

Read More »

11 வருடங்கள் செக்ஸ் உறவை தவிர்த்த தம்பதி!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திடீரென அதிகப்படியாக உடல் எடை கூடியதால் அவர்கள் செக்ஸ் உறவை 11 வருடங்களாக தவிர்த்து வந்துள்ளனர். தற்போது அவர்களுடைய எடை கிட்டத்தட்ட பாதி குறைந்துவிட்டதால் மீண்டும் செக்ஸ் உறவை தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த லீ மற்றும் ரென ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருந்தபோது திடீரென இருவரது உடலும் கன்னாபின்னா என்று எடை அதிகரித்து. ஒரு கட்டத்தில் …

Read More »

எச்சரிக்கும் டிரம்ப்; அசராத ஈரான்

வல்லரசு நாடுகளுடன் செய்துக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுள்ளதாக வல்லரசு நாடுகள் குற்றம்சாட்டின. ஈரான் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இதனால் பொருளாதார தடை படிப்படியாக விலக்கிக்கொள்ள இந்த …

Read More »

பாஜக ஒரு கீழ்த்தரமான கட்சி

கவிஞர் வைரமுத்து குறித்து ஹெச்.ராஜாவின் கீழ்த்தரமான பேச்சுக்கு தற்போது வரை அந்த கட்சி எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார். மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி திருப்பூரில் இஸ்லாமியர்களின் சார்பில் மத்திய பாஜக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகள் மீதே கை வைக்கும் போக்கை பாஜக அரசு கடை பிடித்து வருவதாக கூறினார். இத்தனை …

Read More »

புதிய கட்சி?

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் சசிகலா

முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதில் இருந்து அதிமுக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனையடுத்து தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அதிமுகவில் குறிப்பிட்ட தரப்பினர் தினகரனுக்கு ஆதரவாகவே உள்ளனர். இரட்டை இலையையும், கட்சியையும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் கைப்பற்றியதை அடுத்து தினகரன் புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக தகவல்கள் பரவின. ஆனால் தினகரன் அதிமுக இருக்கும் போது …

Read More »

விண்வெளியிலிருந்து பார்த்தா தமிழகம் புகை மூட்டமா இருக்காம்!

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலே போகிப்பண்டிகை. இதனால் வீட்டில் உள்ள பழைய பொருட்களை முற்றத்தில் வைத்து தீயிட்டு எரிப்பது வழக்கம். தீயிட்டு எரிப்பதால் அதிலிருந்து வெளியாகும் புகை காற்றை மிகவும் மாசுபடுத்துகிறது. இதனால் பிளாஸ்டிக் முதலியவற்றை தீயிட்டு எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் மக்கள் அதை செய்யத்தான் செய்கிறார்கள். நகரங்களில் போகிப்பண்டிகையின் போது காற்று மிகப்பெரிய …

Read More »

சட்டப்பேரவைக்கு வருவாரா கருணாநிதி?

மூத்த அரசியல்வாதியும், திமுக தலைவருமான கருணாநிதி திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவரால் சட்டசபைக்கும் சரி அரசியல் நிகழ்வுகளிலும் சரி கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடருக்கும் கருணாநிதி செல்லவில்லை. அவரது வருகையை எதிர்நோக்கி உள்ளதாகவும், அவரது உடல்நிலை சரியாக பிராத்தனை செய்வதாகவும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார். நேற்று தமிழக சட்டசபையில் …

Read More »

சசிகலாவை வம்புக்கு இழுத்த சூர்யா

சூர்யா, கீர்த்திசுரேஷ், நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் சசிகலா தரப்பினர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவிடம் ஒரு பெண், நாட்டில் ஊழல் இல்லாமல் இருக்க பாடுபடுவேன் என்று கூறுவதாகவும், அந்த பெண்ணின் பெயர் என்ன என்று சூர்யா கேட்க அதற்கு அவர் சசிகலா என்று …

Read More »

வளர்மதிக்கு பெரியார் விருது

தமிழக அரசின் 2017ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வரும் நிலையில் 2017-ம் ஆண்டிற்கான விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். இதன்படி பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கே.ஜீவபாரதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வருகின்ற 16-ம் தேதி சென்னை …

Read More »