Friday , August 29 2025
Home / பார்த்தீபன் (page 6)

பார்த்தீபன்

புதிய அரசமைப்பு தேவையில்லை! – பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் பேசிய பின்னர் சம்பந்தனுக்குப் பதில் என்கிறார் மஹிந்த

“புதிய அரசமைப்பு தற்போது தேவையில்லை. அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவளிப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் முதலில் பேசவேண்டும். அதன்பின்னரே சம்பந்தனுக்கு உரிய பதிலை வழங்கமுடியும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் …

Read More »

புதிய அரசமைப்புக்கு ஆதரவு வழங்கவேண்டும் மஹிந்த! – சம்பந்தன் நேரில் வலியுறுத்து

“புதிய அரசமைப்புக்கு ஆதரவளிக்கவேண்டியது மஹிந்த ராஜபக்ஷவின் கடமையாகும். இதை அவரிடம் தெளிவாக எடுத்துரைத்தேன்” என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போது பேசப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக கேட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்படி கருத்தை வெளியிட்டார். …

Read More »

மஹிந்த – சம்பந்தன் மந்திராலோசனை! – புதிய அரசமைப்புக் குறித்து விரிவான கருத்துப் பகிர்வு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சத்தம் சந்தடியின்றி சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. தனித்து இருவரும் சுமார் 45 நிமிட நேரம் மனம் விட்டுப் பேசியிருக்கின்றனர். புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து அவர்கள் மந்திராலோசனை நடத்தியிருக்கின்றனர் எனத் தெரியவந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அவரது கொழும்பு விஜேராம மாவத்தை இல்லத்தில் …

Read More »

நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை அரசுக்கு அழுத்தம் தொடரும்! – இலங்கைத் தமிழரை இந்தியா கைவிடாது என சம்பந்தனிடம் சுஷ்மா உறுதி 

“இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வே இந்த நிலைமையை ஏற்படுத்தும். எனவே, நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா  சுவராஜ். “இலங்கைத் தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது” எனவும் வாக்குறுதியளித்தார். கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய இந்தியப் …

Read More »

20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவைப்பெற அரசு பகீரதப் பிரயத்தனம்! – முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்களுடன் ஆளுநர் அவசர சந்திப்பு

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைபுக்கு வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் அனுமதியைப் பெறும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஓர் அங்கமாக கிழக்கு மாகாண முதலமைச்சர், தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார் என அறியமுடிகின்றது. இதற்காக தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இராப்போசன விருந்தை ஏற்பாடுசெய்த ஆளுநர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கியத்துவம், அது …

Read More »

சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளியோம்! – புதிய நீதி அமைச்சரும் விடாப்பிடி 

சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசு ஒருபோதும் இடமளிக்காது என்று புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள நேற்று திட்டவட்டமாக அறிவித்தார். அத்துடன், கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற ஊழல்,மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஏன் ஸ்தம்பிதமடைந்துள்ளன என்பதை தான் ஆராய்வார் என்றும் அவர் கூறினார். அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து புதிய நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தலதா அத்துகோரள நேற்று தனது கடமைகளை நீதி அமைச்சில் வைத்து …

Read More »

உள்நாட்டில் நம்பிக்கை இழந்ததால்தான் வெளிநாட்டில் வழக்கு! – ஜகத் ஜயசூரிய விவகாரம் குறித்து சுமந்திரன் கருத்து

“பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் உள்நாட்டில் நீதி நியாயம் கிடைப்பதில் நம்பிக்கையின்மை ஏற்பட்டதால்தான் நமது மக்கள் வெளிநாடுகளில் வழக்குப் போடும் நிலைமை வந்திருக்கின்றது.” – இவ்வாறு கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரன். போரின் இறுதிக் கட்டத்தில் வன்னித் தளபதியாக இருந்தவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஜகத் ஜயசூரிய, தற்போது பிரேஸில் மற்றும் அதைச் சூழ்ந்த நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராக …

Read More »

பொறுப்புக்கூறலிலிருந்து பின்வாங்கவில்லை அரசு! மெதுவாகவே அது நிறைவேற்றப்படும்!! அவசரப்படக்கூடாது என்கிறார் மைத்திரி

பொறுப்புக்கூறலிலிருந்து அரசு பின்வாங்கவில்லை என்றும், அதற்குரிய ஏற்பாடுகள் இலங்கைக்கே உரிய பாணியில் மெதுவாக நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகப் பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, இறுதிப்போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்துவதில் இலங்கை அரசு பின்வாங்குகின்றது என அனைத்துலக மட்டத்தில் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி …

Read More »

“எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே?” – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு, கிழக்கு, தெற்கில் போராட்டம் 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் கொழும்பிலும் நேற்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. வலிந்து காணாமல்போகச்செய்யப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட சமூகத்தினர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்பினர் மற்றும் அரசியல்வாதிகள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் அங்கு காணாமல் …

Read More »

நல்லாட்சி அரசில் அடுத்து என்ன? செப். 4இல் வெளியாகும் அறிவிப்பு! – களமிறக்கப்படுகின்றார் மங்கள

நல்லாட்சி என ஆட்சிசெய்யும் தேசிய அரசின் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றியும், முன்நோக்கி வந்த பயணம் குறித்தும் எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி விசேட அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது. அரசின் சார்பில் மேற்படி அறிவிப்பை நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிடவுள்ளார். இதன்போது அரசின் வரிக்கொள்கைகள் பற்றியும் விவரிக்கப்படவுள்ளது என அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிப்பீடமேறி இம்மாத நடுப்பகுதியுடன் ஈராண்டுகள் கடந்துள்ளன. இந்நிலையில், …

Read More »