Friday , March 29 2024
Home / பார்த்தீபன் (page 5)

பார்த்தீபன்

வலுக்கின்றது சு.கவின் உட்கட்சிப்பூசல்! கேள்விக்குறியில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை!! 

புதிய அரசமைப்பு, 20ஆவது திருத்தச் சட்டமூலம் என முக்கிய சில அரசியல் நகர்வுகளுக்குச் செல்லவேண்டிய சூழலில் தேசிய அரசின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது என அரசின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியின் 66ஆவது தேசிய மாநாடு இன்று  ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கெம்பல் பார்க்கில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பொது எதிரணியிலுள்ள எவரும் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை, தனக்கு அழைப்பில் கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி …

Read More »

மைத்திரி – ரணில் அவசர சந்திப்பு! – ஊவா, தென் மாகாண சபைகளுக்கு ’20’ திருத்தத்துடன் மீண்டும் அனுப்பிவைப்பு

மைத்திரி ரணில் அரசு

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு மீண்டும் குறித்த திருத்தச் சட்டமூலத்தை சில திருத்தங்களுடன் அனுப்புவதற்கான பணிப்புரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பின் பின்னரே மேற்கண்டவாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சர் பைஸர் முஸ்தப்பாவுக்கு …

Read More »

ஐ.தே.கவின் 71ஆவது மாநாட்டில் திஸ்ஸவுக்கு கதவுகள் திறபடுமா?

ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளராகிய தான் அக்கட்சியின் ஊடாகவே மீள் அரசியல் பிரவேசத்தை விரும்புகிறார் என்றும், தேசிய தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட பின்னரே அது சாத்தியமாகும் என்றும் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 36 வருடங்களுக்கு மேலாக ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியல் பயணத்தைத் தொடர்ந்த திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.கவிலிருந்து வெளியேறி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கினார். அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொண்டார். …

Read More »

’20’ இற்கு எதிராக சிவில் அமைப்புகள் போர்க்கொடி!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கச் செயலணியின் பொதுச் செயலாளருமான பாக்கியசோதி சரவணமுத்து போர்க்கொடி தூக்கியுள்ளார். தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவேண்டும் என்று அரசு முயற்சிகள் எடுத்தாலும், அதனைக் காரணங்காட்டி தேர்தல்களைப் பிற்போடவோ அல்லது காலதாமதத்தை ஏற்படுத்தவோ முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து பகிரங்கக் கருத்தாடல்கள் மாகாண சபைகளில் இடம்பெற்றுவருகின்றன. குறித்த சட்டமூலம் ஊவா, தென் …

Read More »

புதிய அரசமைப்பு நிறைவேறுவதை உறுதிப்படுத்த வேண்டும் இந்தியா! – சுஷ்மாவை மீண்டும் சந்தித்து வலியுறுத்தினார் சம்பந்தன் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இலங்கை வந்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை இரண்டாவது தடவையாக நேற்றும் சந்தித்துக் கலந்துரையாடினர். கொழும்பில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் இரவு …

Read More »

புதிய அரசமைப்புக்கு நாடளாவிய ரீதியில் மக்கள் ஆதரவு! – அமெரிக்காவிடம் எடுத்துரைத்தது கூட்டமைப்பு

“புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படுவதனால் தாங்கள் தோற்றுப்போனவர்களாகக் கருதுபவர்களே இனவாத சிந்தனைகளைத் தூண்டுபவர்களாகச் செயற்படுகின்றனர். அரசமைப்பு மறுசீரமைப்புத் தொடர்பாக நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையின்படி நாடளாவிய ரீதியில் புதிய அரசமைப்பொன்று தேவை என்று மக்கள் கருதுகின்றனர்.” – இவ்வாறு அமெரிக்காவிடம் எடுத்துரைத்துள்ளது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாருக்கும் பிரதான …

Read More »

ஜகத் ஜயசூரிய போர்க்குற்றவாளி! ஆதாரங்கள் என் வசம்; தண்டனை அவசியம்!! – பொன்சேகா வலியுறுத்து

“போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை கட்டாயம் தண்டிக்கவேண்டும். இராணுவ உடை அணிந்ததற்காக குற்றமிழைத்தவருக்கு தண்டனை வழங்காது இருக்கமுடியாது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பிலான சான்றுகள் என்னிடம் உள்ளன. உரிய நீதி விசாரணை ஆரம்பிக்கப்பட்டால் அங்கு சாட்சியங்களை சமர்ப்பிக்க நான் தயாராகவுள்ளேன்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிராந்திய அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் …

Read More »

ஜகத் ஜயசூரியவைக் கைதுசெய்தால் முன்னாள் போராளிகளை சிறைபிடிப்போம்! – மிரட்டுகிறார் சம்பிக்க

போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமானால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் கைதுசெய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கட்டளைத் தளபதியாக …

Read More »

ராஜபக்ஷக்களின் ‘பைல்’களை தூசு தட்டத் தயாராகிறது அரசு! – சட்டமா அதிபர் திணைக்களத்திடம் விசேட அறிக்கை கோருகிறார் புதிய நீதி அமைச்சர்

துரித விசாரணைகளின்றி நீண்டகாலமாக தேங்கிக் கிடக்கும் ராஜபக்ஷக்களின் விசாரணைக் கோவைகள் தொடர்பில் தமக்கு விசேட அறிக்கையொன்றை விரைவில் சமர்ப்பிக்குமாறு புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது. மேற்படி விசாரணைக் கோவைகளில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கும், இவற்றுக்கு எதிராக ஏன் சட்ட ஏற்பாடுகள் மந்தகதியில் இடம்பெறுகின்றன என்பதை அறிந்துகொள்வதற்காகவுமே நீதி அமைச்சர் விசேட அறிக்கையைக் கோரியுள்ளார் என உயர்மட்ட அதிகாரியொருவர் …

Read More »

புதிய அரசமைப்பை பெரும்பான்மையுடன் நிறைவேற்றியே தீருவேன்! – மைத்திரி திட்டவட்டம்

“புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட்டு அது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என நம்பகரமாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விவசாய அமைச்சால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சிநிலை கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பங்கேற்றார். கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது கிழக்கு மாகாண சபையின் அரசியல் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து …

Read More »