Friday , March 29 2024
Home / பார்த்தீபன் (page 4)

பார்த்தீபன்

பொன்சேகாவின் கருத்து மீது கோட்டாபய கழுகுப்பார்வை! – விரைவில் பதிலடி வழங்கப்படும் எனவும் சூளுரை

யுத்த காலத்தில் அரசிற்கு

“போர்க்கள இரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உரியவகையில் பதிலடி கொடுக்கப்படும்”  என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றமிழைத்துள்ளார் என்றும், அதற்குரிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதால் சாட்சியமளிக்கத் தான் தயார் என்றும் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் வினவியபோதே கோட்டாபய …

Read More »

இறுதிப் போரில் நடந்தது என்ன? நீதிமன்றில் ஆஜராகி உண்மையை அம்பலமாக்குக! – பொன்சேகாவிடம் சம்பந்தன் கோரிக்கை

“இறுதிப் போரில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களிலும், மனிதப் படுகொலைகளிலும் ஈடுபட்டமைக்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்துள்ளார். எனவே, சரத் பொன்சேகா எவ்வித தயக்கமுமின்றி நீதிமன்றில் ஆஜராகி உண்மையை வெளிப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை  சரத் பொன்சேகாவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊக்குவிக்கும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …

Read More »

மைத்திரியின் கருத்துக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி!

“போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ள படையினரைக் காப்பாற்றும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். இவர் தன்னுடைய இனத்தைக் காப்பாற்ற முற்படுகின்றார்; அழிக்கப்பட்ட  பாதிக்கப்பட்ட தமிழினத்துக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கப் பின்னடிக்கின்றார்.”  – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது. “ஜனாதிபதி சர்வதேச சமூகத்தினருக்கு வழங்கிய அல்லது அவர்களுடன் இணங்கிக் கொண்ட விடயங்களைச் செய்வது நல்லது” என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. …

Read More »

ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரத்தை கையிலெடுக்கின்றது மு.கா.! – ஜனாதிபதியின் அவசர தலையீட்டைக் கோரினார் ஹக்கீம்; சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை கொண்டு வரவும் முடிவு

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்தும், ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை அரசு நேசக்கரம் நீட்டவேண்டும் எனக் கோரியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை கொண்டுவரவுள்ளது. இந்தத் தகவலை தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக இலங்கை ஆதரவுக்குரல் எழுப்பவேண்டியதன் அவசியத்தைப் பற்றி தான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் எடுத்துரைத்துள்ளார் என்றும் …

Read More »

எந்த இராணுவத் தளபதியின் மீதும் கைவைக்க இடமளியேன்! – சு.க.மாநாட்டில் மைத்திரி சூளுரை

போர்க்குற்றச்சாட்டு என்ற போர்வையில் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் மீதோ அல்லது எந்தவொரு இராணுவத் தளபதியின் மீதோ அல்லது நாட்டின் எந்தவொரு இராணுவச் சிப்பாய் மீதோ கைவைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அத்துடன், புலிச்சார்பு அமைப்புகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அதன் நிழலாகச் செயற்படும் அரசசார்பற்ற அமைப்புகளின் தாளத்திற்கேற்ப தான் ஆடமாட்டார் எனவும் அவர் இடித்துரைத்தார். கொழும்பு கெம்பல் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் …

Read More »

உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் இறைமையை உறுதிப்படுத்தும் தீர்வு! – அதற்கே முயல்கிறோம் என்கிறார் சம்பந்தன் 

“எமது தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அவர்களின் இறைமையை உறுதிப்படுத்தும் ஒரு தீர்வுக்காகவே நாங்கள் கடுமையாக முயன்று வருகின்றோம். எங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் எமக்குப் போதியளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.” – இவ்வாறு யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் …

Read More »

சமஷ்டிக்கு இதுதான் தருணம்! – சுமந்திரன் எம்.பி. விவரிப்பு

“தமிழர்கள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைக் கோருவதற்கும் – ஏன் சுயநிர்ணய உரிமையைக்கோருவதற்கும் உரித்துடையவர்கள் என்பதை அங்கீகரிக்கும் விதத்தில் இலங்கை உயர்நீதிமன்றத்திடமிருந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்புக் கிட்டியிருக்கின்றது. இந்தச் சமயத்தில்தான் நாட்டின் இரு பெரும் கட்சிகளும் சேர்ந்து ஒரு கூட்டு அரசை அமைத்திருக்கின்றன. எனவே, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றைத் தமிழ் மக்கள் உரிமையுடன் கோரிப் பெற்றுக்கொள்வதற்கான சரியான தருணம் இதுதான்.” – இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் தமிழ்த் …

Read More »

மைத்திரியின் சகோதரர் படுகொலை வழக்கு விசாரணை ஜூரிகள் சபை முன்னிலையில்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரியந்த சிறிசேன கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை ஜூரிமார் சபையின் முன்னிலையில் நவம்பர் 20 தொடக்கம் 30 வரை நடைபெறுமென பொலநறுவை மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வழக்கின் சந்தேகநபரான டொன் இஷார லக்மால் சப்பு தந்திரி (வயது – 34) பொலநறுவை மேல்நீதிமன்ற நீதியரசர் நிமால் ரணவீரவின் முன்னிலையில் தான் நிரபராதி எனத் தெரிவித்ததையடுத்து வழக்கு மேற்குறிப்பிட்ட கால எல்லையில் ஜூரிகள் சபை முன்னால் தொடர்ந்து …

Read More »

புதிய அரசமைப்புக்கு முடிவுகட்ட நேரில் களமிறங்குகிறார் கோட்டா! – பரப்புரைப் போரை முன்னெடுக்க 6இல் ‘வெளிச்சம்’ எனும் அமைப்பு உதயம்

புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீவிரம் காட்டிவரும் நிலையில், அந்த முயற்சியைத் தோற்கடிப்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே நேரடியாகக் களமிறங்கி பிரசாரப் போரை வழிநடத்தவுள்ளார். இதற்காக ‘எலிய’ (வெளிச்சம்) எனும் சிவில் அமைப்பொன்றை உருவாக்கியுள்ள அவர், எதிர்வரும் 6ஆம் திகதிமுதல் அதன் செயற்பாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார். அமைப்பின் அறிமுக நிகழ்வு மிகவும் பிரமாண்டமான முறையில் பொரலஸ்கமுவையில் நடைபெறவுள்ளதுடன், அதற்குத் தலைமை தாங்குமாறு தனது …

Read More »

சு.கவின் அதிருப்திக்குழு மைத்திரியுடன் பேச்சு! – பட்ஜட் கூட்டத்தொடரின்போது ‘பல்டி’க்கு தயாராக உத்தேசம்

மைத்திரிபால சிறிசேன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாடு நடைபெற்றுள்ள நிலையில் அதிருப்தி நிலையில் இருக்கும் சு.க. உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது தேசிய அரசிலிருந்து வெளியேறும் தமது முடிவை அதிருப்தி நிலையிலுள்ள உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வெளியிடவுள்ளனர் என்றும், அதன் பிறகு கூட்டரசிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என்றும் அறியமுடிகின்றது. தேசிய அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டும் என மைத்திரியுடன் உள்ள 17 உறுப்பினர்கள் தொடர்ச்சியாக …

Read More »