Friday , August 29 2025
Home / பார்த்தீபன் (page 51)

பார்த்தீபன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரி வடக்கில் ஆர்ப்பாட்டங்கள்!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச விசாரணை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரி வடக்கில் ஆர்ப்பாட்டங்கள்! காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மன்னார் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குப் பகிரங்க வேண்டுகோளை முன்வைக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் …

Read More »

தமிழ் மாணவர்கள் கடத்தல்: விசாரணையை நிறுத்தும்படி சி.ஐ.டிக்கு ஆளுங்கட்சி எம்.பி. அழுத்தம்! – அநுர

தமிழ் மாணவர்கள் கடத்தல்: விசாரணையை நிறுத்தும்படி சி.ஐ.டிக்கு ஆளுங்கட்சி எம்.பி. அழுத்தம்

தமிழ் மாணவர்கள் கடத்தல்: விசாரணையை நிறுத்தும்படி சி.ஐ.டிக்கு ஆளுங்கட்சி எம்.பி. அழுத்தம்! – அநுர தெஹிவளையில் தமிழ் மாணவர்கள் 5 பேர் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் ஊடாக ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:- “உள்நாட்டுப் …

Read More »

இலங்கை அரசுக்கு கால அவகாசம்: இந்தியா ஆதரவு! – சுஷ்மா தெரிவிப்பு

இலங்கை அரசுக்கு கால அவகாசம்: இந்தியா ஆதரவு! - சுஷ்மா தெரிவிப்பு

இலங்கை அரசுக்கு கால அவகாசம்: இந்தியா ஆதரவு! – சுஷ்மா தெரிவிப்பு 2015இல் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதனை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் டுவிட்டரில் …

Read More »

ரஷ்யாவைச் சென்றடைந்தார் மைத்திரி!

ரஷ்யாவைச் சென்றடைந்தார் மைத்திரி

ரஷ்யாவைச் சென்றடைந்தார் மைத்திரி! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விஷேட அழைப்புக்கமைய ரஷ்யாவில் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மைத்திரிபால இன்று பிற்பகல் மொஸ்கோ நகர டொமொடேடுவா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். ரஷ்ய அரசின் சார்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளால் ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவினர் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் முக்கிய நிகழ்வாக ஜனாதிபதி சிறிசேனவுக்கும் …

Read More »

லசந்த, தாஜுதீன் கொலை வழக்குகளை மூடிமறைக்க அரசு முயற்சி! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

லசந்த, தாஜுதீன் கொலை வழக்கு

லசந்த, தாஜுதீன் கொலை வழக்குகளை மூடிமறைக்க அரசு முயற்சி! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, ரகர் வீரர் வசீம் தாஜுதீன் உட்பட சர்ச்சைக்குரிய படுகொலை வழக்குகளை மூடிமறைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. சபையில் குற்றஞ்சாட்டினார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாருக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துள்ளபோதிலும் இன்னும் நீதிமன்றத்தில் ஏன் வழக்குத் தொடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், …

Read More »

காணாமல்போனோர் உயிருடன் இல்லையா? துணிவிருந்தால் கோட்டா எம் முன் வந்து சொல்லட்டும்! – உறவுகள் ஆவேசம்

காணாமல்போனோர்

காணாமல்போனோர் உயிருடன் இல்லையா? துணிவிருந்தால் கோட்டா எம் முன் வந்து சொல்லட்டும்! – உறவுகள் ஆவேசம் “எமது பிள்ளைகளை எப்போது? எத்தனை மணிக்கு? எங்கே? எவரிடம்? ஒப்படைத்தோம் என்ற விலாவாரியான விவரத்தைக் கோட்டாபயவுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றோம்” “எங்கள் பிள்ளைகளை நாங்கள்தான் இராணுவத்திடம் கையளித்தோம். அவர்கள் சரணடைந்ததைக் கண்ட சாட்சியாக இன்னமும் நாங்கள் உயிருடன்தான் இருக்கின்றோம். இராணுவத்திடம் ஒப்படைத்த பிள்ளைகள் இறந்துபோனார்கள் என்று எப்படிச் சொல்லுவீர்கள். துணிவிருந்தால் கோட்டாபய நேரில் …

Read More »

தமிழர் தாயகத்தில் உறுதியுடன் தொடர்கின்றன உறவுகளின் போராட்டங்கள்!

தமிழர் தாயகத்தில் உறுதியுடன் தொடர்கின்றன உறவுகளின் போராட்டங்கள்

தமிழர் தாயகத்தில் உறுதியுடன் தொடர்கின்றன உறவுகளின் போராட்டங்கள்! கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து தருமாறும், அவர்களுடைய உண்மையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி இன்று 31 ஆவது நாளாகவும் கிளிநொச்சியில் போராட்டம் தொடர்கின்றது. வடக்கு, கிழக்கில் ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் போராட்டங்களும் நீண்டு கொண்டே செல்கின்றன. வடக்கில் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலை மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தியே அவர்கள் போராட்டத்தைத் …

Read More »

ஐ.நாவில் இன்று வருகின்றது மனித உரிமை ஆணையரின் அறிக்கை!

ஐ.நாவில் இன்று வருகின்றது மனித உரிமை ஆணையரின் அறிக்கை

ஐ.நாவில் இன்று வருகின்றது மனித உரிமை ஆணையரின் அறிக்கை! இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் இந்த அமர்வில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க வேண்டும். …

Read More »

கலப்புப் பொறிமுறைக்கு ஒருபோதும் இணங்காது இலங்கை! – ரணில் திட்டவட்டம்

கலப்புப் பொறிமுறைக்கு - ரணில் திட்டவட்டம்

கலப்புப் பொறிமுறைக்கு ஒருபோதும் இணங்காது இலங்கை! – ரணில் திட்டவட்டம் “நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கு இலங்கை ஒருபோதும் இணங்காது. அத்துடன், சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திலும் இலங்கை இணைந்துகொள்ளாது.” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மேலும் கூறியவை வருமாறு:- “இலங்கையில் நடைபெற்ற போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. இவை குறித்து விசாரணை …

Read More »

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை நான் இயக்கவில்லை! – கோட்டா கூறுகின்றார்

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை நான் இயக்கவில்லை! – கோட்டா கூறுகின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, இரகசிய இராணுவக் கொலைக் குழுவை இயக்கி ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டார் என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார். 2005 …

Read More »