“கீதா குமாரசிங்க எம்.பி. தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சம்பந்தமாக எனக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக எழுத்துமூல அறிவிப்பு கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.” – இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுக் காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் என்பன நிறைவடைந்ததை அடுத்து, வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரம் ஆரம்பமானது. …
Read More »அமைச்சர்கள் சிலருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை! – அது குறித்தும் நடவடிக்கை தேவை என்கிறது ஜே.வி.பி.
தேசிய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலருக்கும், ராஜபக்ஷவினருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை இருக்கின்றது. எனவே, இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தில் கீதா குமாரசிங்கவுக்கு ஒருவிதத்திலும், மற்றையவர்களுக்கு ஏனைய விதத்திலும் அணுகுமுறை கடைபிடிக்கப்படுகின்றதா என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் …
Read More »தலதா மாளிகைக்கும் செல்கின்றார் மோடி!
இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினக் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 11 ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி கொழும்பு வரவுள்ளார். இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹட்டன், கிளங்டன் வைத்தியசாலையை 12ஆம் திகதி மோடி திறந்துவைக்கவுள்ளார். மலையக பயணத்தின்போதே அவர் தலதா மாளிக்கைக்கும் செல்லவுள்ளார். …
Read More »நீதி கோரி வவுனியாவில் தொடர்கின்றது உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம்! – வலுக்கின்றது பேராதரவு
காணாமல் ஆக்கப்பட்டோரின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 69ஆவது நாளாகவும் தொடர்ந்தது. இன்று மாலை 3 மணியளவில் போராட்டக் களத்துக்குச் சென்ற மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர், மன்னார் மாவட்ட பெண்கள் சமாசத்தினர், மன்னார் மாவட்ட மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து தங்கள் ஆதரவுகளை வழங்கினர்.
Read More »பொன்சேகா தலைமையில் அத்தியாவசியச் செயலணி! – முடிவில் மாற்றமே இல்லை என மைத்திரி திட்டவட்டம்
அமைச்சரவையில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் பொறுப்புடன் பேசுங்கள் என்று அமைச்சர்களைக் கடிந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் செயலணி நிறுவப்படும் முடிவில் மாற்றமில்லை என்றும் கூறியுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்ட சரத் பொன்சேகா விவகாரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. “அரசியல் நோக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்போது மக்களுக்கான அத்தியாவசிய சேவையை …
Read More »உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தி போராட்டம் மேற்கொள்ள மஹிந்த அணி முடிவு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசை வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்துவதற்கு மஹிந்த ஆதரவு அணி தீர்மானித்துள்ளது. “பொது எதிரணி எம்.பிக்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது திகதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பியான ரஞ்சித் டி சொய்சா தெரிவித்தார். உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளபோதிலும் அவற்றுக்கான …
Read More »இந்தியத் தூதரக அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு! – கூட்டமைப்பு எம்.பி. சரவணபவன் காட்டம்
“ஊடக சுதந்திரத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள் தலையிடும் ஓர் அவல நிலை இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது.” – இவ்வாறு குற்றஞ்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினரும் ‘உதயன்’ – ‘சுடர் ஒளி’ குழுமத் தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன். ‘”இந்தியத்துணைதூதரகம் மிக மோசமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்தியாவுக்கு எதிரானதாக எந்தக் கருத்தும் எமது பத்திரிகையில் வரக்கூடாது என்பதை நிலைநிறுத்தி அவர்கள் செயற்படுகிறார்கள். தமது தூதரகத்திற்குச் செல்பவர்களிடம் …
Read More »ஒருபோதும் திரும்பப் பெறமுடியாத பகிரப்பட்ட அதிகாரங்களே தேவை! – சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு
மத்திய அரசால் ஒருபோதும் திரும்பப் பெறப்பட முடியாத அளவுக்குப் பகிரப்பட்ட அதிகாரத்தைத்தான் நாம் தீர்வாகக் கேட்கின்றோம் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம். ‘சுடர் ஒளி’யின் சகோதரப் பத்திரிகையான ‘உதயன்’ பத்திரிகைப் பணியாளர்கள் படுகொலை மற்றும் ஊடக நிறுவனம் மீதான தாக்குல் நடத்தப்பட்டதன் 11ஆவது ஆண்டு நினைவாக நேற்று நடத்தப்பட்ட ‘வேட்கை’ எனும் ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ‘புதிய …
Read More »ஈழத்தின் மாபெரும் ஊடகப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!
ஈழத்தின் மாபெரும் ஊடகப் படுகொலை நிகழ்ந்த 11ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்றாகும். ‘சுடர் ஒளி’யின் சகோதரப் பத்திரிகையான ‘உதயன்’ நிறுவனத்துக்குள் புகுந்த ஆயுததாரிகளினால், ஊழியர்கள் இருவர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நாளான நேற்று ஊடக சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது. ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது. 2006ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள …
Read More »மஹிந்தவின் உறவினர்கள் மைத்திரியுடன் இரகசியம்! – அரசியல் அரங்கில் வெகுவிரைவில் அதிரடி மாற்றங்கள் என்கிறார் எஸ்.பி.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசியமாகப் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.” – இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். இதனால் அரசியல் அரங்கில் வெகுவிரைவில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகின்றமை தொடர்பில் வினவியபோதே அவர் …
Read More »