முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போஷகராக வைத்திருப்பதா, இல்லையா என்பதைப் பற்றிய தீர்மானம் சு.கவின் அடுத்த நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது என அந்தக் கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த வாரம் வரும் வெசாக் பூரணை தினத்தின் பின் கூடவுள்ள நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராக இருந்துகொண்டே அந்தக் …
Read More »பொன்சேகாவுக்கான புதிய பதவி குறித்து ஆர்வப்படும் இராஜதந்திரிகள்!
பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ள புதிய பதவி தொடர்பில் அறிந்துகொள்வதற்கு இராஜதந்திரிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களின்போது, இராணுவத்தில் சிறப்புச் செயலணியை உருவாக்கி அதிகாரங்களை ஒப்படைக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்து உள்நாட்டு அரங்கிலும், சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலையைத் ஏற்படுத்தியிருந்தது. இதன் …
Read More »தேசிய அபிவிருத்தி இலக்குகளில் மாகாண சபைகளின் கவனம் தேவை! – முதலமைச்சர்கள் மாநாட்டில் ஜனாதிபதி வலியுறுத்து
நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு மாகாண சபைகளின் செயற்பாடுகள் முறைப்படியாக இருக்க வேண்டியதுடன் மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பும் சீர்செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நேற்று நடைபெற்ற 33 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஒன்பது மாகாண சபைகளும் ஒன்பது விதமாக செயற்படுவதனால் நாட்டின் பொது …
Read More »நல்லிணக்கம், சகவாழ்வுக்கான தேசிய கொள்கையை ஏற்றது அமைச்சரவை! – மைத்திரி, மனோ கூட்டாக சமர்ப்பிப்பு
நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை பத்திரத்தை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் அமைச்சர் மனோ கணேசனும் கூட்டாக கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பித்துள்ளனர். இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. அமைச்சரவை சம்பிரதாயத்தின்படி எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அடுத்த அமைச்சரவை …
Read More »சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு! – இராஜாங்க அமைச்சர் விஜயகலா சாடல்
“படையினரினால் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான தேசிய அரசு சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுகின்றது. – இவ்வாறு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இறுதிப் போரில் …
Read More »அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து! – மஹிந்தவின் மே தின நிகழ்வே காரணம் என்கிறார் சம்பந்தன்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் …
Read More »முள்ளிவாய்க்கால் நினைவேந்தலன்று முல்லைத்தீவுக்கு செல்கிறார் மைத்திரி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்காக ஜனாதிபதி முல்லைத்தீவுக்குச் செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு இந்த வருடம் தேசிய வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நாட்டில் மிகவும் வறுமையான மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தேசிய …
Read More »மூன்று நாள் பயணமாக வடக்குக்கு ரணில்! – 19ஆம் திகதி செல்கிறார்
வடக்கு மாகாணத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி செல்லவுள்ளார். பல்வேறு சந்திப்புக்களையும், ஆராய்வுகளையும் மேற்கொள்ளும் நோக்குடனேயே அவரது இந்தப் பயணம் அமையவுள்ளது எனத் தெரியவருகின்றது. இந்த மாதம் 19 ஆம் திகதி மன்னார் மாவட்டத்துக்கு பிரதமர் செல்லவுள்ளார். அங்கு பல்வேறு தரப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செல்லவுள்ளார். …
Read More »கொலையாளிகளின் பாதுகாப்பு அரணாகவே தூதரகங்களைப் பயன்படுத்தினார் கோட்டா! – மங்கள குற்றச்சாட்டு
படுகொலைகள் மற்றும் கடத்தல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரணாகவே வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தினார் என்று சபையில் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரித்துக்கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன், கோட்டாபயவின் புதல்வர், மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஆகியோர் தொடர்பிலும் அவர் தகவல்களை …
Read More »மஹிந்தவுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சபையில் பொது எதிரணி போர்க்கொடி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திடீரென குறைக்கப்பட்டதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள மஹிந்த ஆதரவு அணியினர் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினர். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத்தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று, 23/2 இன்கீழான விசேட அறிவிப்பு ஆகியன முடிவடைந்த பின்னர் …
Read More »