தினகரன் தரப்புக்கு கிடைத்த முதல் வெற்றி ஆர்கே நகர் தேர்தல் வெற்றி. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் இந்த பதவியேற்பு விழாவை அமோகப்படுத்தினார்கள். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். டிடிவி தினகரன் சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டதும் அவரது ஆதரவாளர்கள், வருங்கால முதல்வர் டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டனர். இந்த கோஷம் அறையையும் தாண்டி வெளியே கேட்டது. இதனால் என்ன செய்வதென்பது புரியாமல் …
Read More »ஜெனிவாவில் இலங்கை தொடர்பான விவாதம் மார்ச் 21 ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்பான பிரதான விவாதம் 27ஆம் திகதி இடம்பெறும். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை முன்வைப்பார். அதன்பின்னர் இலங்கை தனது தரப்பு நியாயம் …
Read More »பொம்மை வெளி குடி தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு
பொம்மை வெளிப் பகுதியில் யாழ்ப்பாண மாநகர சபையால் ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கப்படவுள்ளது. அந்தக் கிணறு அமைக்கப்பட்டால் பொம்மை வெளியில் உள்ள மக்களின் குடி தண்ணீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும் என யாழ்ப்பாண மா நகர சபை ஆணையாளர் ரி. ஜெயசீலன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், பொம்மை வெளிப்பகுதியில் குடியி ருக்கும் மக்கள் அந்தப் பகுதியில் யாழ்ப்பாண மாநகர சபையால் அமைக்கப்பட்ட நீர்க் குழாயில் இருந்து வரும் தண்ணீரையே தமது தேவைகளுக்காகப் …
Read More »இன்றைய ராசிபலன் 29.12.2017
மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். பரணி நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். தானுண்டு வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வாகனம் பழுதாகம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் …
Read More »4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி: ஜிம்பாவே திணறல்
டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வம் குறைந்து வரும் நிலையில் சமீபத்தில் பகல் – இரவு டெஸ்ட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி தற்போது ஜிம்பாவே மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. மார்க்கம் அபாரமாக விளையாடி 125 …
Read More »சசிகலாவை சந்திக்க எம்எல்ஏவாக செல்லும் தினகரன்!
ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் எம்எல்ஏவாக உள்ள டிடிவி தினகரன் தேர்தல் வெற்றிக்கு பின்னர் சசிகலாவை சந்திக்க செல்லவில்லை. காரணம் சசிகலாவை தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் சந்திக்க சிறைத்துறை அனுமதிக்கிறது. இதனையடுத்து தினகரன் வரும் 29-ஆம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தினகரன் சட்டசபையில் எப்படி செயலாற்ற வேண்டும், எடப்பாடி, ஓபிஎஸ் அணியினரை …
Read More »மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை திமுக தேறாது – மீண்டும் மு.க. அழகிரி
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். பிரதான எதிர்கட்சியான திமுக தோல்வி அடைந்தது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி தொலைக்காட்சி ஒன்றில் கருத்து முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்த அழகிரி “செயல் தலைவராக ஸ்டாலின் உள்ளவரை திமுக தேறாது. வேனில் சுற்றி வந்து பேசினால் மட்டும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். களப்பணி ஆற்ற …
Read More »தேவையானளவு மழை கிடைத்தும் எவருமே அதைச் சேமிக்கவில்லை
தேவையான மழைவீழ்ச்சி கிடைத்தும் எவருமே மழைநீரைச் சேமிக்கவில்லை. இயன்றளவு மழைநீரை கடலுக்கு அல்லது தமது பிரதேசங்களிலிருந்து அப்புறப்படுத்தி விடுவதிலேயே சகலரும் குறியாக இருக்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாணம் திருநெல்வேலி யிலுள்ள வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த வருடங்களைவிட இந்த வருடம் தேவையான அளவு மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது. ஆனால் அதைச் சேகரிப்பதற்கான திட்டம் இல்லை. மழை நீரைச் சேகரிக்காவிடின் அது …
Read More »அரியாலை இளைஞர் கொலை – சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு!!
அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் எதிவரும் ஜனவரி 9ஆம் திகதிவரை இன்று நீடிக்கப்பட்டது. கடந்த ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட …
Read More »நாட்டில் கடும் நிதி நெருக்கடி சபையை உடன் கூட்டுங்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாண நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மகிந்த அணியான கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவே சபாநாயகரிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் முதல் நாட்டில் கடுமையான நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி மூலதன சந்தையும் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து செல்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் பெற்றுக்கொண்ட 292 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்னமும் …
Read More »