Monday , November 18 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நெடுந்தாரகை படகு சேவையில் ஈடுபடுவதில்லை: அனந்தி குற்றச்சாட்டு

நெடுந்தாரகை படகு சேவையில் ஈடுபடுவதில்லை: அனந்தி குற்றச்சாட்டு

நெடுந்தாரகை படகு சேவையில் ஈடுபடுவதில்லை: அனந்தி குற்றச்சாட்டு

 

நெடுந்தீவு மக்களின் கடல்பயணத்தை இலகு படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கபட்ட ”நெடுந்தாரகை” படகு வெள்ளோட்டம் விடப்பட்டதன் பின்னர் பயணிகள் சேவையில் ஈடுபடவில்லையென வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனால் நெடுந்தாரகை படகு சேவை தொடர்பில் விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளிக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

வடமாகாணசபையின் 83 ஆவது அமர்வு நேற்று நடைபெற்ற போதே மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் நெடுந்தாரகை படகு புதிதாக கட்டப்பட்டு படகு வெள்ளோட்டத்தில் விடப்பட்ட பின்னர் போக்குவரத்திற்கு ஈடுபடுத்தப்படவில்லை.

இதனால் நெடுந்தீவு மக்கள் வடமாகாணசபையின் மீது கடும்கோபத்துடன் உள்ளதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளிக்கப்படும் என கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் க.விந்தன் கூறுகையில், 6 சிப்பந்திகள் இந்த படகை ஓட்டுவதற்காக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சியும் வழங்கப்பட்டது.

ஆனால் அவர்களால் படவை ஓட்ட முடியவில்லை. இதனால் கடற்படையினர் ஒத்துழைப்பு வழங்கினார். ஆனால் கடற்படையினரும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க முடியாது என கூறிவிட்ட நிலையில் படகினால் சேவையில் ஈடுபட முடியவில்லை எனத் தெரிவித்தார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …