ஜி20 மாநாட்டில் டிரம்ப்-புடின் இடையே ரகசிய சந்திப்பு?

ஜி-20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜி-20 எனப்படும் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஜூலை மாதம் 7-8 தேதிகளில் ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர்.

புடின் மற்றும் டிரம்ப் ஒருமுறை சந்தித்ததாக அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், புடினும் டிரம்பும் இரண்டாவது முறையாக சந்தித்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க வெள்ளை மாளிகை இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. இரு நாட்டு தலைவர்களுடம் ஜி-20 மாநாட்டின் விருந்து நிகழ்ச்சியின் இறுதியில், சந்தித்து பேசிக் கொண்டதாகவும், இது இரண்டாவது சந்திப்பு என்று கருத முடியாது என்றும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *