நாளை முதல் புதிய பேருந்து கட்டணம் அறிமுகம்!

இலங்கை போக்குவரத்து துறையில் புதிய பேருந்து கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துசபை தலைமை அதிகாரி பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

புதிய பேருந்துக்கட்டண மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் பேருந்துகளில் புதிய பேருந்து கட்டணங்கள் காட்சிப்படுத்தப்படவேண்டும் என கூறப்பட்டிருக்கம் அதேவேளை பேருந்து கட்டணம் உரியவகையில் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்டறிவதற்கு நாடுதழுவிய ரீதியில் பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டண அறவீடு மற்றும் பருவகால அனுமதி அட்டை வழங்காமை தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருக்கும் தருணத்தில் அதனை 0115 559 595 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கலாம் என போக்குவரத்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *