கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்!
பமுனுகம – தெலபுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சுகவீனமடைந்ததன் காரணமாக ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பமுனுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பமுனுகம பொலிஸ் நிலையத்தில் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
இலங்கையில் கொரோனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு
-
தாயை கொன்று சடலத்தின் அருகில் படுத்திருந்த மகன் – திருகோணமலையில் கொடூரம்
-
லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனாவுக்குப் பலி
-
தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ?
-
குருநாகல் மருத்துவமனையில் தீ விபத்து
-
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு
-
வீதியோரமாக வீசப்பட்ட சிசு – விசாரணை முன்னெடுப்பு