யாழில் மீண்டும் ரவுடிகள் குழு அட்டகாசம்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
யாழில் மீண்டும் ரவுடிகள் குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் கேமி குழுத் தலைவரின் சகோதரன் வாளால் தாக்கப்பட்டுள்ளநிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கேமி குழுத் தலைவரின் சகோதரரான 26 வயதான அஜித் என்ற இளைஞரே இவ்வாறு வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த இளைஞன் இன்று காலை கல்வியங்காடு பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள வாய்க்கால் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவர் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு விரைத்த கோப்பாய் பொலிஸார் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை இன்று காலை 11 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த சிலரே அவரை அங்கு வீசிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா வியாபாரத்தினால் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மற்றுமொரு குழுவினர் இவரை வெட்டியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Tamil Technology News

 

Tamilnadu News