சஜித்திற்கு எதிராக பொன்சேகா போர் கொடி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை பின்கதவால் பிரதமராக நியமித்தால் அதனை நிச்சயம் தோற்கடிப்போம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த தகவலைக் கூறினார்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமிப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருந்தன.

இருப்பினும் அவ்வாறு எந்தவொரு நியமனமும் இதுவரை இடம்பெறவில்லை.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் பொன்சேகா, ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடுகள் கடந்த வருடத்தில் தோற்கடிப்பு செய்யப்பட்டதுபோல இந்த வருடத்திலும் நிகழ்ந்தால் அதனையும் தோற்கடிப்போம் என்று சூளுரைத்தார்.

இதேவேளை கட்சியின் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.