தேவையான பொருட்கள்
இட்லி / தோசை மாவு – ஒரு கப்,
ரெடிமேட் பஜ்ஜி – போண்டா மிக்ஸ் – 50 கிராம்,
வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்),
நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
நறுக்கிய பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 200 கிராம்,
உப்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை:
எண்ணெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலக்கவும். இந்த மாவை, சூடான எண்ணெயில் போண்டாக்களாக போட்டுப் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: மேற்கூறிய மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, நறுக்கிய காய்களைத் தோய்த்து பஜ்ஜியும் போடலாம்.