அனுஷ்கா நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் படம் பாகமதி. இப்படம் ஒரு ஹார்ரோர் படமாக உருவாகியுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக வந்திருந்த அனுஷ்கா பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றி தனது கருத்தை கூறியுள்ளார்.
“தற்போது இருக்கும் காலத்தில் பெண்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர், அவர்களின் உறவுகளுக்குளே பாலியல் தொல்லைகள் ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வு சொல்கிறது , அதை பல பெண்கள் வெளியே சொல்லமறுக்கின்றனர்,
பெற்றோர்கள் இதுபோல் தங்கள் குழந்தைகள் சந்தித்தால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லித்தரவேண்டும் அப்போதுதான் அவர்களுக்கு ஒரு தைரியம் பிறக்கும். பாகுபலி ௨ வில் என்னை தொடைபவரின் கையே வெட்டுவேன்.
அதே போல் தைரியம் நிஜ வாழ்க்கையில் நடக்கும் போது பெண்கள் எதிர்கொள்ளவேண்டும் என்று கூறினார்