Tuesday , October 14 2025
Home / சினிமா செய்திகள் / சசிகுமாரின் அடுத்த படத்தின் நாயகியாகும் அதுல்யா

சசிகுமாரின் அடுத்த படத்தின் நாயகியாகும் அதுல்யா

கடந்த ஆண்டு வெளியான ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் நாயகியும், தற்போது உருவாகி வரும் சமுத்திரக்கனியின் ‘ஏமாலி’ படத்தின் நாயகியுமான அதுல்யா ரவி தற்போது சசிகுமார் படத்தின் நாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி இணையும் படம் ‘நாடோடிகள் 2’. இந்த படத்தின் நாயகியாக ஏற்கனவே அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது இன்னொரு நாயகியாக அதுல்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து அதுல்யா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனது விருப்பத்துக்குரிய இயக்குனரான சமுத்திரக்கனி அவர்களின் படமான ‘நாடோடிகள் 2’ படத்தில் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சசிகுமாருடன் பணிபுரிவதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். அஞ்சலி உள்பட இந்த படத்தின் டீமுடன் பணிபுரிவதில் எனக்கு மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது எதிரும் புதிருமாக இருந்த பரணி, கஞ்சாகருப்பு ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

Check Also

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு…

லாஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு… பிக்பாஸ் 3ல் பங்கேற்றவர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். …