Monday , December 23 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இணைய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரை

இணைய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரை

மிகவும் பொறுப்புவாய்ந்த, வினைத்திறனான இணைய ஊடகத்துறைக்காக உருவாக்கப்பட்ட ஒழுக்கக்கோவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது

இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி,

“இணைய ஊடகத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுக்க நெறிக்கோவை தயாரிப்பு பணியானது மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்தார்.

அத்துடன் இது ஊடகத்துறைக்கு மட்டுமன்றி அரசியல் துறை மற்றும் முழு மனித சமூகத்திற்கும் காலத்திற்குத் தேவையானதொரு பணியாகும்.” என்றும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

மேலும் இணைய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்றை விரைவில் ஏற்பாடு செய்யுமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இணைய ஊடகவியலாளர்கள், அமைச்சர் மங்கள சமரவீர, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …