Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / நம்பிக்கை பற்றி இயேசுவின் பொன்மொழிகள்!

நம்பிக்கை பற்றி இயேசுவின் பொன்மொழிகள்!

மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நம்பிக்கையில்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் வெற்றியடையாது. நம்பிக்கையுடன் செயலாற்றுவதே வெற்றியில் பாதியை கொடுத்துவிடுகிறது.

உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமையடைவாய். கண் விழித்திரு. திருப்தியான அளவு உணவு பெறுவாய். உழைப்பாளி குறைவாகச் சாப்பிடுகிறானோ, மிகுதியாகச் சாப்பிடுகிறானோ அவனது உறக்கம் இனிமையானது.

நான் அமைதியாக கீழே படுத்து உறங்குவேன். ஏனெனில், என்னைப் பத்திரமாக வாழச்செய்பவர் கர்த்தர் தான். உன்னைக் காக்கிறவர் உறங்க மாட்டார்.

கர்த்தர் தனக்குப் பிரியமானவனுக்கே உறக்கத்தைத் தருகிறார். நீங்கள் நம்பிக்கையுடன், ஒரு மலையைப் பார்த்து, “”கடலில் பெயர்ந்து விழு” என்றாலும் அப்படியே நடக்கும்.

நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும், உறுதியும் கொண்டிருங்கள். நம்பிக்கை இல்லாத இதயமுள்ளவன் கடவுளை விட்டு விலகியிருக்கிறான். இத்தகைய இதயம் உங்களில் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv