நான் போட்ட கையெழுத்து என்னுடையதல்ல

நடிகர் விஷாலின் ஆர்.கே.நகர் தொகுதி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு ஒரே காரணம் அவரை முன்மொழிந்த தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் தாங்கள் விஷாலை முன்மொழிந்து கையெழுத்து போடவில்லை என்று கூறியதுதான்

இந்த நிலையில் தேர்தல் அதிகாரி முன் தீபன் கூறும் வாக்குமூலத்தின் வீடியோவை விஷால் வெளியிட்டுள்ளார். அதில் தீபன், ‘நான் போட்ட கையெழுத்து என்னுடையதல்ல’ என்று கூறுகிறார். இதைவிட ஜனநாயக கேலிக்கூத்து எங்காவது நடந்ததுண்டு? என்றும் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்

நான் கையெழுத்தே போடவில்லை என்றுதான் தீபன் கூறியிருக்க வேண்டும், ஆனால் நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை என்பது ‘மண்டையில இருக்குற மறந்துட்டேனே’ என்று வடிவேல் ஒரு படத்தில் கூறு வது போல் இருப்பதால சமூக வலைத்தள பயனாளிகள் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *